திருச்சி ஸ்டார் செஸ் அகாடமி சார்பில் மாவட்ட அளவில் சிறுவர்களுக்கான செஸ் போட்டி - பரிசளிப்பு

திருச்சி ஸ்டார் செஸ் அகாடமி சார்பில் மாவட்ட அளவில் சிறுவர்களுக்கான செஸ் போட்டி - பரிசளிப்பு

திருச்சி ஸ்டார் செஸ் அகாடமி சார்பில் மாவட்ட அளவில் சிறுவர்களுக்கான செஸ் போட்டி உறையூர் ஸ்ரீவிக்னேஷ் பப்ளிக் பள்ளியில் நடைபெற்றது. இதில் 7, 9, 11, 14, 19 வயது பிரிவுக்கான செஸ் போட்டிகளில் திருச்சி மாவட்டத்தில் இருந்து 50 பள்ளிகளைச் சேர்ந்த 293 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

இப்போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசும், கலந்து கொள்ளும் அனைவருக்கும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. குறிப்பாக ஏழு வயது உட்பட்ட பிரிவுகள் கலந்து கொண்ட மாணவ மாணவிகளுக்கு அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. திருச்சி மாவட்டத்தை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் இந்த செஸ் போட்டியில் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

இந்த பரிசளிப்பு விழாவில் Rtn. Suba Prabhu, Administrator, Joseph Eye Hospital, President Rotary Club of Trichy Butterflies, Chairman of Jaya Special School மற்றும் S. Noor Mohamed, BNI Emperor, Trichy Member Need 4 IT Computer / Managing Partner ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். 

ஸ்ரீ விக்னேஷ் பப்ளிக் பள்ளியின் முதல்வர் எஸ்.கிருத்திகா, திருச்சி மாவட்ட செஸ் சங்கத்தின் துணைத் தலைவர் என்.வெங்கடராமன், தலைமை நடுவர் எஃப்.ஏ. சுந்தர் ஆர்.ஜே, திருச்சி மாவட்ட சதுரங்க சங்கம் செயலாளர் பி.தினகரன், திருச்சி மாவட்ட செஸ் சங்கத்தின் இணைச் செயலாளர் ஆர்.பாலசுப்ரமணியன் மற்றும் ஸ்டார் செஸ் அறக்கட்டளை நிறுவனர் மற்றும் செயலாளரும், திருச்சி மாவட்ட செஸ் சங்கம் இணை செயலாளர் பி. இஸ்மாயில் ஆகியோர் கலந்து இவ்விழாவினை சிறப்பித்தனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision