மதுபாட்டில்,லாட்டரி சீட்டு விற்ற 5 பேர் கைது

மதுபாட்டில்,லாட்டரி சீட்டு விற்ற 5 பேர் கைது

லால்குடி அருகே நகர் பகுதியில் தனியார் உணவு விடுதியில் அனுமதியின்றி மதுபானம் விற்ற  வின்சென்ட்(70)  அருண் சின்னப்பா(29) வேல்முருகன் (20)  ஆகிய 3  பேரை கைது செய்து அவரிகளிடமிருந்து 125 குவாட்டர் மது பாட்டில்கள்,ரூ. 2240 ரொக்கம் ஆகியவற்றை  பறிமுதல் செய்தனர்.

 லால்குடி ரயில்வே ஆட்டோ ஸ்டாண்ட் அருகில் தடைசெய்யப்பட்ட  கேரளா லாட்டரி சீட்டுகளை  விற்பனை  செய்தனர்.

சுரேஷ்குமார்(41) புளுட்டஸ் (55)  2 பேரை கைது செய்த லாட்டரி சீட்டு விற்க பயன்படுத்திய பயணிகள் ஆட்டோ மற்றும் பணம் செல்போன் ஆகியவற்றை திருச்சி மாவட்ட  காவல் கண்காணிப்பாளரின்  தனிப்படை உதவி ஆய்வாளர் நாகராஜ் தலைமையிலான போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.