சமயபுரம் அருள்மிகு ஆதி மாரியம்மன் கோயிலில் மாசித் தேரோட்டம்

சமயபுரம் அருள்மிகு ஆதி மாரியம்மன் கோயிலில் மாசித் தேரோட்டம்

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே இனாம் சமயபுரம் ஊராட்சியில் உள்ளது அருள்மிகு ஆதி மாரியம்மன் கோவில்.இக்கோயிலில்  ஆண்டுதோறும்  மாசி தேரோட்ட விழா பூச்சொரிதல் விழாவுடன் தொடங்கி வெகு விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டும் மாசி தேரோட்டத்தை முன்னிட்டு கடந்த 7ஆம் தேதி பூச்சொரிதல் விழாவுடன் தொடங்கியது .
 

பின்னர் கடந்த 22 ஆம் தேதி முதல் தேர் திருவிழா தொடங்கி அம்மன் தினமும் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

இந்நிலையில் இன்று மாசி தேரோட்டம் வெகு விமரிசையாக  நடைபெற்றது. தேரோட்டத்தில் கோயில் இணை ஆணையர் கல்யாணி,  கோவில் பணியாளர்கள் ஊர் பொதுமக்கள் , பக்தர்கள் உள்ளிட்டோர் திரளாக பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். 

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH