திருச்சி மத்திய சிறையில் மலிவு விலையில் சிறைவாசிகளின் இறைச்சி அங்காடி

திருச்சி மத்திய சிறையில் மலிவு விலையில் சிறைவாசிகளின் இறைச்சி அங்காடி

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள தோட்டத்தில் சிறைவாசிகளால் ஆடு வளர்க்கும் பணி மேற்கொள்ளப்படுகிறது. இந்த பணியில் இரண்டு சிறைவாசிகள் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். அவ்வாறு வளர்க்கப்படும் ஆடுகள் மத்திய சிறையின் வளாகத்தில் அமைந்துள்ள சிறை அங்காடியில் ஆட்டு இறைச்சியாக விற்பனை செய்வது வழக்கம். அதே போன்று இன்று காலை 07.00 மணியிலிருந்து ஆட்டு இறைச்சி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெளிச்சந்தையில் ஆட்டு இறைச்சி ( எலும்புடன் ) ரூபாய் 850 க்கும், தனிக்கறி ( எலும்பு இல்லாமல் ) ரூபாய் 900 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் பொதுமக்களின் நலன்கருதி சிறை அங்காடியில் ஆட்டு இறைச்சி ( எலும்பின் ) ரூபாய் 650க்கும், தனிக்கறி ( எலும்பு இல்லாமல்)  ரூபாய் 750க்கும் என விற்பனை செய்யப்படுகிறது.

இந்த வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு சிறை நிர்வாகம் சார்பில் கேட்டுக் கொள்ளகிறது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH