தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு
தமிழ்நாடு தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் சங்கத்தினர் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமாரிடம் மனு ஒன்று அளித்தனர். அந்த மனுவில் தமிழ்நாடு முழுவதும் சுமார் 25,000 மேற்பட்ட தனியார் ஆம்புலன்ஸ் வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இச்சங்கத்தில் சுமார் ஆயிரத்திற்கு மேற்பட்ட தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் உறுப்பினர்களாகவும், ஆதரவாளர்களாகவும் செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் கொரோனா பெருந்தொற்று பேரிடர் காலத்தில் மக்களுக்கு தன்னலமின்றி இரவு பகல் பாராமல் ஆம்புலன்ஸ் சேவை வழங்கிய தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
இதில் பல ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் குடும்பத்தினர் எந்தவித ஆதரவும் இன்றி எதிர்கால வாழ்வே கேள்விக்குறியாகி நிற்கின்றனர். தற்போது உள்ள சூழ்நிலையில் தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் நலனுக்காக தனியாக நலவாரியம் அமைத்து அவர்களின் உரிமைகளை பாதுகாக்க குழு காப்பீடு உள்ளிட்ட நலத்திட்டங்களை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதற்கு தமிழக அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO