ஜமாபந்தி கோரிக்கை மனுக்களை இணையதள முகவரி வழியாக பதிவேற்றம் செய்ய வேண்டும். திருச்சி மாவட்ட ஆட்சியர் தகவல்
கோவிட்-19 நோயத் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் தமிழகத்தில் சில தளர்வுகளுடன் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் அரசாணை நிலை எண்:395 வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மை ஜ(வ.நி(3)(2) துறை நாள் : 07.06.2021-ன்படி திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் பசலி ஆண்டு 1430 (2020-2021) க்கான மனுக்கள் ஜமாபந்தி ரத்து செய்யப்பட்டுள்ளது.
எனவே பொதுமக்கள் ஜமாபந்தி கோரிக்கை தொடர்பான மனுக்களை தாங்களாகவே அல்லது இ-சேவை மையங்கள் மூலமாக https://gdp.tn.gov.in/jamabandhi
என்னும் இணையதள முகவரி வழியாக 31.07.2021 வரை பதிவேற்றம் செய்து கொள்ளலாம்.
பதிவேற்றம் செய்யப்படும் மனுக்கள் உரிய முறையில் பரிசீலனை செய்யப்பட்டு மனுதாரர்களுக்கு தகவல் வழங்கப்படும். இந்த வாய்ப்பினை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள தெரிவிக்கப்படுகிறது. மேற்கண்ட தகவலை மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு தெரிவித்துள்ளார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/Cmwvowix0UuFpUMHHUljve