போதை பொருள் அற்ற மாவட்டமாக திருச்சி திகழ வேண்டும் - மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்

போதை பொருள் அற்ற மாவட்டமாக திருச்சி திகழ வேண்டும் - மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்

மதுவிலக்கு மற்றும் ஆயத்தாவைத்துறையின் சார்பில் போதைப் பொருள் தடுப்பு இயக்கத்தின் கண்காணிப்புக்குழுக் கூட்டம் திருச்சி கலையரங்கம் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. 

மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்றது. இதில் கிராம, வட்டார, பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள போதைப் பொருள் தடுப்பு இயக்கத்தின் உறுப்பினர்களுடனான கண்காணிப்புக் குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப்குமார் தலைமையில், மாநகர காவல் ஆணையர் காமினி , மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார், முன்னிலையில் இன்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் கூறுகையில்.... திருச்சி மாவட்டத்தில், போதைப் பொருள் தடுப்பு இயக்கம், கிராம / வட்டார / பேருராட்சி / நகராட்சி / மாநகரட்சி பகுதிகளில் கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள், இருப்பு வைத்தல், விற்பனை செய்தல் மற்றும் கடத்துதல், தடை செய்யப்பட்ட போதை பொருட்களான பான் மசாலா, கூலிப் மற்றும் இதர போதை பொருட்கள் விற்பனைகளை தடுத்தல், மெத்தனால் மற்றும் எத்தனால் பரிவர்த்தனை, கொண்டு செல்லுதல் மற்றும் மதுவிலக்கு குற்றங்களினை தடுக்கும் பொருட்டு 507 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இக்குழுக்களில், காவல்துறை, உணவு பாதுகாப்புத் துறை, மருந்து கட்டுப்பாட்டு துறை, கிராம நிர்வாக அலுவலர், கிராம உதவியாளர், ஊராட்சி செயலர், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பில் ஒருவர் ஆகியோர் அடங்கி இருப்பார்கள். பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி ஆகிய பகுதிகளில் சுகாதார ஆய்வாளர் தலைமையில் வார்டு வாரியாக துப்புறவு மேற்பார்வையாளர் நிரணயிக்கப்பட்டுள்ளார். இக்குழுக்கள் அவர்கள் பணிபுரியும் பகுதிகளில் கள்ளச்சாராயம் காய்ச்சுதல், இருப்பு வைத்தல், விற்பனை செய்தல், கடத்துதல் போன்ற செயல்பாடுகள் நடைபெறுகிறதா என்பது உள்ளிட்டவற்றை கண்காணித்திடவும் மேலும், அவ்வப்போது நடைபெறும் கோவில் திருவிழாக்கள், திருமணம்,

இதர வீட்டு வீசேஷங்கள் மற்றும் இறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறும் போது கள்ளச்சாராயம் பயன்படுத்தப்படுகிறதா என்பதையும் ஆய்வு செய்ய வேண்டும். மேலும் போதை பொருட்களான பான் மசாலா, சுல்லிப் மற்றும் இதர போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்பதையும் ஆய்வு செய்ய வேண்டும். அவ்வாறு ஏதும் விற்பனை செய்யப்பட்டால் உடனடியாக காவல் துறைக்கும். பாதுகாப்புத் துறைக்கும் கீழ்கண்ட செல்லிடைப்பேசி / வாட்ஸ் அப் எண்களில் தகவல் தெரிவிக்க வேண்டும்.

கள்ளச்சாராயம், போதை பொருட்கள் தகவல்களுக்கு தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் போதை பொருட்கள் தகவல்களுக்கு மாநகர காவல் ஆணையர் அலுவலகம் 9626273399, 9626839595, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் 7695883212 ,9626839595, மாநிலம் Toll Free No : 10581, மாநில எண் 9444042322 என்கிற எண்களில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல்கள் தெரிவிப்பவரின் விபரங்கள் பாதுகாக்கப்படும்.

மேலும் ஒவ்வொரு வாரமும் தங்களது பகுதியில் நடைபெற்ற கோவில் திருவிழாக்கள், திருமணம், இதரவீட்டு விசேஷங்கள் மற்றும் இறப்பு நிகழ்ச்சிகள் ஆய்வு செய்யப்பட்டு அதன் விபரத்தினை அந்தந்தக் குழு தலைவரிடம் தெரிவித்திட வேண்டும் எனவும்எனவும், நமது திருச்சி மாவட்டத்தில் எந்த ஒரு போதை பொருட்கள் விற்பனை மற்றும் பயன்படுத்துதலை தடுத்திடும் வகையில் சிறப்பாக பணிகளை மேற்கொண்டு போதை பொருள் அற்ற மாவட்டமாக திருச்சி மாவட்டம் திகழ முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார். 

இந்நிகழ்வில், உதவி ஆணையர் கலால் உதயக்குமார், வருவாய் கோட்டாட்சியர்கள், அரசுத்துறை அலுவர்கள், காவல் துறையினர் கலந்து கொண்டனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision