மூதாட்டியின் வீட்டின் பூட்டை உடைத்து 25 பவுன் நகை கொள்ளை

மூதாட்டியின் வீட்டின் பூட்டை உடைத்து 25 பவுன் நகை கொள்ளை

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள குண்டூர் அய்யம்பட்டி பெத்தலேகம் நகரை சேர்ந்தவர் ஜெயலட்சுமி (63) இவரது கணவர் 2021 ஆம் ஆண்டும், மகன் 2022 ஆம் ஆண்டும் உயிரிழந்த நிலையில் ஜெயலட்சுமி மட்டும் தனியாக வசித்து வருகிறார்.

இந்த நிலையில் ஜெயலட்சுமி சேலத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு கடந்த 17 ஆம் தேதி சென்றவர். நேற்று மாலை வீட்டிற்கு வந்து பார்த்த பொழுது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்படு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் இருந்த பீரோக்களும் உடைக்கப்பட்டு பீரோவில் இருந்து 24.5 பவுன் நகை ரூ 5 ஆயிரம் ரொக்கம் மற்றும் சில்வர் பாத்திரங்கள் திருடு போய் இருப்பது தெரியவந்தது.

இது சம்பந்தமாக ஜெயலட்சுமி உடனடியாக நவல்பட்டு போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நவல்பட்டு போலீசார் உடனடியாக கைரேகை பிரிவு போலீசார் மற்றும் மோப்ப நாய் பிரிவு போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர்.

அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த கைரேகை பிரிவு போலீசார் குற்றவாளிகளின் கைரேகை உள்ளிட்ட தடயங்களை சேகரித்தனர். அதைப்போல் சம்பவ இடத்திற்கு வந்த மோப்பநாய் சிறிது தூரம் சென்றதும் நின்றது இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். 

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision