இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி நூற்றாண்டு துவக்கம் மற்றும் தோழர் ஆர்.நல்லகண்ணு 100வது பிறந்தநாள் விழா
திருச்சி உறையூர் குறத்தெரு (ஆர்.என்.கே. நகர்) நடைபெற்ற நிகழ்ச்சியில் கே.முருகானந்தம் 23வது கிளை செயலாளர் தலைமை தாங்கினார். முன்னிலை வை.புஷ்பம் Ex MC, இரா.சீனிவாசன், A.சக்திவேல்மூர்த்தி. நூற்றாண்டு மலரினை மத்திய கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் எம். செல்வராஜ், வெளியீட்டு உரையாற்றினார்.
நூற்றாண்டு கட்சி கொடியினை வைத்தியநாதன் நினைவு கொடி கம்பத்தில் மூத்த தோழர் பொன். தனபால் ஏற்றி வைத்தார். 100வது பிறந்தநாள் விழா காணும் தோழர் ஆர். நல்லகண்ணு பேரில் மாமன்ற உறுப்பினர் க.சுரேஷ் மரக்கன்று நட்டார். 23வது ஆண்டு நினைவு தினத்தில் கே.டி.கே தங்கமணி திருவுருவப்படத்திற்கு ஏஐடியுசி பொதுச் செயலாளர் V.நடராஜா மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
மேலும் பொதுமக்கள் 500 கும் மேற்பட்டோருக்கு உணவு வழங்கப்பட்டது. நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் சார்பில் தமிழகம் முழுவதும் 100 இடங்களில் நடைபெறும் புத்தகக் கண்காட்சி உறையூரில் திருக்குறள் முருகானந்தம் திறந்து வைத்தார். திமுக செயலாளர் ரவி, மார்க்சிஸ்ட் கட்சி சம்பத், மதிமுக செயலாளர் சேகர், மனிதநேய மக்கள் கட்சி இப்ராம்சா, CPI- மாநகர் மாவட்ட செயலாளர் S சிவா, மேற்கு பகுதி செயலாளர் இரா.சுரேஷ் முத்துசாமி,
மேற்கு பகுதி மாதர் சம்மேளன தலைவர் க.ஆயிஷா, செயலாளர் M சுமதி, இளைஞர் பெருமன்ற மாநகர மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் M.செல்வகுமார், மேற்கு பகுதி தலைவர் N.S பாட்ஷா, மாணவர் பெருமன்ற மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மௌ.ஜெய்லானி, ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம் S.சூர்யா, சிந்தனை மையம் செயலாளர் பேராசிரியர் மணி மோகன், மேற்கு பகுதி பொருளாளர் ரவீந்திரன் உள்ளிட்டோரும் வாழ்த்துரை வழங்கினர். ஆட்டோ பி.துரைராஜ் நன்றியுரை கூறினார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision