திருச்சி அரசு மருத்துவமனையில் உலக பக்கவாத தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
திருச்சி கி.ஆ.பெ விஸ்வநதம் மருத்துவ கல்லூரி மற்றும் மகாத்மா காந்தி நினைவு மருத்துவமனை நரம்பியல் துறை சார்பில் இன்று (29.10.2021) அக்டோபர் 29 உலக பக்கவாத தின விழிப்புணர்வு நாள் நடத்தப்பட்டது. இதில் மருத்துவமனை முதல்வர் மருத்துவர் வனிதா, மருத்துவ கண்காணிப்பாளர் மருத்துவர் அருண் ராஜ், நரம்பியல் மருத்துவத் துறை தலைவர் மருத்துவர் சாக்கரடீஸ் மற்றும் உதவி மருத்துவ அலுவலர்கள், மருத்துவ மாணவர்கள், செவிலியர்கள் கலந்து கொண்டனர்.
பொதுமக்களுக்கு பக்கவாதம் திடீர் என்று ஏற்படும் நோய் அறிகுறிகள் ஆன முகம் கோணுதல், கை கால் செயலிழப்பு தலைசுற்றல், கண் பார்வை இழப்பு மற்றும் பேச்சு திறன் இழப்பு ஏற்பட்டால் நான்கு மணி நேரத்திற்குள் அருகில் உள்ள அரசு மருத்துவமனையை அணுகும்போது உடனடியாக ஸ்கேன் செய்யப்பட்டு அதற்குரிய விலை உயர்ந்த மருந்து செலுத்துவதன் மூலம் அதன் பாதிப்பிலிருந்து முழுமையாக விடுபடலாம் என்று அறிவுறுத்தப்பட்டது.
பக்கவாதத்திற்கு முதன்மையான காரணம் உயர்ரத்த அழுத்தம் ஆகும். சர்க்கரைநோய், புகைப்பிடித்தல் மற்றும் மது அருந்துதல் உறக்கமின்மை, உடற்பயிற்சியின்மை அதிக கொழுப்பு சத்து உணவுகள், அதிக உப்பு உணவில் சேர்த்துக் கொள்வது, பதப்படுத்தப்பட்ட இறைச்சி உண்பது ஆகியவை பக்கவாத நோய்க்கு வழிவகுக்கும் என்ற சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து நோயாளிகள் சந்தேகங்களுக்கும் மருத்துவர்கள் விடையளித்தனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/EtMAlm0CVDVGKgF2tRCUHW
டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/Trichyvision