திருச்சி அருகே 12 அடி நீள மலை பாம்பு பிடிபட்டது

திருச்சி அருகே 12 அடி நீள மலை பாம்பு பிடிபட்டது

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்ததுவரங்குறிச்சி செவந்தாம் பட்டி அருகில் சக்தி என்பவரது பண்ணை வீட்டு பகுதியில் 12 அடி நீளம் மலைப்பாம்பு ஒன்று கிடந்துள்ளது.

அதைக் கண்ட உரிமையாளர் துவரங்குறிச்சி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தார். தகவலின் பெயரில் நிலைய அலுவலர் மனோகர் மற்றும் சிறப்பு நிலைய அலுவலர் நாகேந்திரன் சம்பவ இடத்திற்கு சென்று மலை பாம்பினை சிறிது நேரம் போராட்டத்திற்கு பின்பு லாவகமாக பாம்பு பிடிப்பான் உதவியுடன் பிடித்தனர்.

அதனைத் தொடர்ந்து நேற்று இரவு யாகாபுரம் ஒத்தக்கடை அருகே உள்ள குளவாய் பட்டியில் பெரியசாமி என்பவரது வீட்டின் அருகில் சுமார் 10 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பு ஒன்று இருந்ததை கண்டு அஞ்சிய பெரியசாமி உடனடியாக துவரங்குறிச்சி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தார். தகவலின் பெயரில் நிலைய அலுவலர் மனோகர் மற்றும் நாகேந்திரன் தலைமையிலான

தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்கள் உதவியுடன் மலை பாம்பினை பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். வனத்துறையினர் மலைப்பாம்புகளை பத்திரமாக பச்சைமலை பகுதியில் ஒரு பாம்பையும், மற்றொன்றை பெரிய மலைப் பகுதியிலும் கொண்டு சென்று விட்டனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision