நேர்மையாக வாக்களித்த 40 லட்சம் பேர் பாதங்களை கழுவுவேன் திருச்சியில் கருணாஸ் பேட்டி
முக்குலத்தோர் புலிப்படை கட்சி தலைவர் கருணாஸ் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்... இந்த தேர்தல் ஜனநாயக தேர்தல் அல்ல பணநாயக தேர்தல். பணம் பட்டுவாடா செய்யவில்லை என பொதுமக்கள் சாலை மறியல் ஈடுபட்டது இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் நடந்தது இது வெட்கக்கேடானது. இது அடுத்த தலைமுறையினர் மத்தியில் அரசியல் ஒரு வியாபாரம் என்ற நிலைக்கு தள்ளும். இதையும் தாண்டி 40 லட்சம் பேர் நேர்மையாக வாக்களித்துள்ளனர். அவர்கள் பாதங்களை கழுவுவேன் என உணர்ச்சிப்பூர்வமான தெரிவித்தார்.
திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்க உள்ளார் அவருக்கு எனது வாழ்த்துக்கள். தமிழகம் இழந்த உரிமைகளை மீட்டெடுப்போம் என்ற நம்பிக்கை உள்ளது. அவரை விரைவில் சந்தித்து முக்குலத்தோர் புலிப்படை சார்பாக எங்களுடைய 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்துவேன்.
அதிமுக தோல்வி குறிப்பிட்ட இன மக்களை ஒதுக்கி வைத்தது ஒரு காரணம் எனவும், அனைவருக்கும் சம உரிமை வழங்க வேண்டும். இனிவரும் காலங்களில் அதிமுகவின் எதிர்காலம் எப்படி இருக்கும் என எனக்கு தெரியாது. அக்கட்சி விவகாரத்தில் தலையிட விரும்பவில்லை.
அக்கட்சிக்கு சசிகலா மீண்டும் தலைவராக வாய்ப்பு உள்ளதா என்றதற்கு அவர் அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்து விட்டார். அந்த கட்சி உடைய நிலைப்பாடு என்ன என்பதை அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்.
அதிர்ஷ்டத்தில் வந்தவர்கள் சிலர் முதல்வர் ஆனார்கள். அடிமட்ட தொண்டனிலிருந்து படிப்படியாக முன்னேறி இன்று முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்க உள்ளார் தெரிவித்தார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF