பால் வியாபாரியிடம் வழிப்பறி செய்த ரவுடி குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது.

பால் வியாபாரியிடம் வழிப்பறி செய்த ரவுடி குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது.

கடந்த (08.05.24)-ந் தேதி திருச்சி பாலக்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முதலியார் சத்திரம் உள்ள டீ கடை அருகே நடந்து சென்ற பால் வியாபாரியிடம் ஒருவர் மது அருந்த பணம் கேட்டதாகவும் தரமறுத்த மேற்படி நபரை கத்தியை காண்பித்து சட்டை பையில் இருந்த பணத்தை வழிப்பறி செய்ததாக கொடுத்த புகாரின பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

பின்னர் விசாரணையில் மேற்கண்ட சம்பவத்தில் ஈடுபட்ட கெம்ஸ்டவுன் பகுதியை சேர்ந்த ரவுடி குணசேகரன் @ குணா (56), த.பெ.அருமைதாஸ் என்பவரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், ரவுடி குணசேகரன் @ குணா மீது பாலக்கரை காவல்நிலையத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரிகள் விற்பனை செய்ததாக 19 வழக்குகளும், கஞ்சா விற்பனை செய்ததாக 16 வழக்குகளும், வழிப்பறி செய்ததாக 8 வழக்குகளும், கொலை முயற்சி செய்ததாக 3 வழக்குகளும், அடிதடியில் ஈடுபட்டதாக 2 வழக்குகளும், கொலை செய்ததாக ஒரு வழக்கு என 52 வழக்குகளில் சம்பந்தப்பட்டிருப்பது விசாரணையில் இருப்பது தெரிய வந்தது.

எனவே ரவுடி குணசேகரன் என்பவரின் தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு பாலக்கரை காவல் நிலைய காவல் ஆய்வாளர் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்து, திருச்சி மாநகர காவல் ஆணையர் ந.காமினி, மேற்படி எதிரியை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் அடைக்க ஆணையிட்டார். அதனை தொடர்ந்து எதிரி மீது பிறப்பிக்கப்பட்ட குண்டர் தடுப்பு சட்ட ஆணையினை சார்பு செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும், திருச்சி மாநகரில் அபாயகரமான ஆயுதத்தை காண்பித்து வழிப்பறி மற்றும் கொள்ளை சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision