நமக்கு நாமே திட்டத்தின் கீழ் இறகுபந்து விளையாட்டு அரங்கம் அமைக்க ரூ.25லட்சம் காசோலை வழங்கிய பொதுமக்கள்

நமக்கு நாமே திட்டத்தின் கீழ் இறகுபந்து விளையாட்டு அரங்கம் அமைக்க ரூ.25லட்சம் காசோலை வழங்கிய பொதுமக்கள்

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி  நமக்கு நாமே திட்டத்தின் கீழ் பணிகள்         மேற்கொள்வதற்கு  மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில்                             மாண்புமிகு   மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், அவர்களிடம் 
ராணிமெய்யம்மை நகர் பகுதியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் இறகு பந்து விளையாட்டு அரங்கம் கட்டும் பணியினை மேற்கொள்ள ரூ.25.00 இலட்சம் காசோலை  வழங்கினார்கள்.
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி  மேயர் அலுவலக கூட்ட அரங்கில் மாண்புமிகு மேயர் மு. அன்பழகன் இன்று 06.03. 2023 மாநகர பொதுமக்களிடம் கோரிக்கை மற்றும் குறைதீர்க்கும் மனுக்களை பெற்றார்.

திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் ‘நமக்கு நாமே’ திட்டத்தின் கீழ் வளர்ச்சிப்பணிகள் மேற்கொள்ள திருச்சிராப்பள்ளி மாநகராட்சி, வார்டு குழு அலுவலகம் 4,  வார்டு எண்.65க்குட்பட்ட ராணிமெய்யம்மை நகர் பகுதியில் இறகு பந்து விளையாட்டு அரங்கம் கட்டும் பணியினை மேற்கொள்ள மதிப்பீட்டு தொகை ரூ.75.00 இலட்சத்தில்  பொதுமக்களின் பங்களிப்பாக மூன்றில் ஒரு பங்கு தொகையாக ரூ.25.00 இலட்சம் வழங்குவதற்கு சம்மதித்து அதற்கான காசோலை  நமக்கு நாமே திட்டத்தின் கீழ் மேற்கொள்வதற்கு  மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், ஆணையர் மரு.இரா.வைத்திநாதன், ஆகியோரிடம்  காசோலை பொதுமக்கள் சார்பாக   மக்கள் குறைதீற்கும் நாள் கூட்டத்தில் வழங்கினார்கள்.

 

திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் ‘நமக்கு நாமே’ திட்டத்தின் மூலம் பொது மக்களின் பங்களிப்புடன் நீர்நிலை புனரமைப்பு (தூர்வாருதல் மற்றும் கரையினை பலப்படுத்துதல் – பங்களிப்பு தொகை 50%), விளையாட்டு திடல் அமைப்பு, தெருவிளக்கு பொருத்துதல், பூங்கா உருவாக்குதல் மற்றும் மற்றும் மேம்படுத்துதல், எல்.இ.டி. மின்விளக்கு அமைத்தல், ‘சி.சி.டி.வி.’ கேமரா பொருத்துதல், பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் கூடிய மரக்கன்று நடுதல், மாநகராட்சி பள்ளிகளை மேம்படுத்துதல், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள கட்டிடங்களில் சுற்றுச்சுவர் மற்றும் பிற அடிப்படை வசதிகளை ஏற்படுத்துதல் மற்றும் புனரமைத்தல், மழைநீர் வடிகாலுடன் கூடிய  சாலை அமைத்தல் மற்றும் மேம்படுத்துதல் போன்ற பணிகளை மேற்கொள்ளலாம். மேலும் தங்களது பகுதிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அமைத்தல் அல்லது மேம்படுத்துதல் போன்ற பணிகளுக்கு குடியிருப்போர் நலச்சங்கங்கள் மற்றும் பொதுமக்கள் மாநகராட்சியினை அனுகி உடனடியாக தேவைப்படும் வசதிகளை பெற்று பயன்பெற மாநகராட்சி ஆணையரால் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

இந்நிகழ்ச்சியில் துணைமேயர் திருமதி. ஜி.திவ்யா,  மாநகராட்சி நகரப்பொறியாளர் திரு.பி.சிவபாதம்,  மண்டலத் தலைவர்கள் திருமதி விஜயலட்சுமி கண்ணன் , திருமதி. துர்காதேவி திருமதி.பு.ஜெய நிர்மலா மற்றும் மாநகராட்சி  செயற்பொறியாளர்கள்  , உதவி ஆணையர்கள் , உதவி செயற்பொறியாளார்கள், சுகாதார அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்ஆப் மூலம் அறிய
  https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5


 
#டெலிகிராம் மூலமும் அறிய....  https://t.me/trichyvisionn