திருச்சி மாநகரை அழகுபடுத்த முதல்முறையாக சாலைகளில் அலங்கார தெரு விளக்குகள்

திருச்சி மாநகரை அழகுபடுத்த முதல்முறையாக சாலைகளில் அலங்கார தெரு விளக்குகள்

 திருச்சி மாநகராட்சி சார்பில் மாநகரை அழகுபடுத்தும் வகையில் முதல்முறையாக ரூபாய் 80 லட்சம் மதிப்பில் திருவானைக்காவல் சென்டர்மீடியனில் பாரம்பரியமிக்க அலங்கார தெரு விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது.

திருச்சி மாநகராட்சி மொத்தம் 167.23சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டுள்ளது திருச்சி மாநகராட்சியில் கடந்த 2011 ஆம் ஆண்டு கணக்கெட்டின் படி 9,15,589 மக்கள் தொகையை கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கணக்கெடுப்பின்படி மாநகராட்சியில் 10,45,436 மக்கள் தொகை கணக்கிடப்பட்டுள்ளது.

இன்றைய காலகட்டத்தில் சுமார் 11 லட்சத்திற்கும் அதிகமாக மக்கள் வசிப்பதாக ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது தமிழகத்தின் மையப்பகுதியாக உள்ள திருச்சியில் தினமும் ஏராளமானோர்  வந்து செல்வதால் மாநகரைஅழகுப்படுத்தி குப்பையில்லாத நகரமாக மாற்ற வேண்டும் என தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் உத்தரவின் பேரில் திருச்சி மநகரை அழகுப்படுத்தி வருகிறது.

அதன்படி சுவர்களில் போஸ்டர் ஒட்டுவதை தவிர்க்கும் வகையில் முக்கிய இடங்களில் பலகை அமைக்கப்பட்டுள்ளது, பாதாள சாக்கடை பணிகள் முடிந்த பகுதிகளில் சாலைகள் போடப்பட்டு வருகிறது இதற்கிடையில் மாநகரில் சீரான போக்குவரத்திற்காக  மாநகரில் சாலைகள் அகலப்படுத்தப்பட்டு சாலைகளில் சென்டர் மீடியன் அமைக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மாநகரில் விரிவு படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள முக்கிய சாலைகளில் அதிக மின்னொளி வழங்கும் வகையில் பழைய கட்டிடக்கலைக்கு ஏற்ற விளக்குகளின் கம்பங்கள் மற்றும் அலங்கார கவசங்கள் நிறுவப்பட்டு பழைய மாடல் தெரு விளக்குகளும் மாநகராட்சி கமிஷனர் வைத்தியநாதன்,மேயர்  அன்பழகன் உத்தரவின் பெயரில் அமைக்கப்பட்டு வருகிறது. அதில் ஸ்ரீரங்கம் திருவானைக்கோவில் பகுதியில் உள்ள பல சுற்றுலா தலங்கள் இணைக்கும்  சாலை திருவானைக்கோவில் முதல் நேப்பியர் பாலம் வரை கன்னிமாரா தோப்பு ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்ட சாலைகளில் சென்டர் மீடியனில் பழைய மாடல் தெருவிளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது மற்ற சாலைகளில் உள்ள வழக்கமான தெரு விளக்குகளை போல் அல்லாமல் மாநகராட்சியில் முதல் முறையாக சென்டர் மீடியங்களில் இருக்கும் எஃகு  மின்னழுத்தத்திலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட பழங்கால மாடல் விளக்குகள் நிறுத்தப்பட்டு வருகிறது.

இதற்காக மாநகராட்சி பொது நிதி மூலம் ரூபாய் 80 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதில் திருவானைக்கோவில் முதல் நேப்பியர் பாலம் வரையிலும் ட்ரங்க் ரோடு மற்றும் கன்னிமாராத்தோப்புபகுதிகளில் உள்ள சென்டர் மீடியனின் பாரம்பரியமிக்க வகையில் பழைய மாடல் 120 வாட்ஸ் மதிப்பில் 56 தெரு விளக்குகள் அமைக்கப்பட்டது.

இதன் மூலம் அதிக வெளிச்சம் மட்டுமின்றி பழைய மாடலில் தெருவிளக்குகள் இருப்பதால் இரவில் காண்போரை கவர்ந்திழக்கும் வகையில் உள்ளது இதுபோல் மாநகராட்சியின் முக்கிய பகுதியில் உள்ள சென்டர் மீடியனில் பாரம்பரிய  அலங்கார விளக்குகள் அமைக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் கூறினார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH

      

#டெலிகிராம் மூலமும் அறிய....  https://t.me/trichyvisionn