திருச்சியில் அதிமுக, திமுகவினரால் சலசலப்பு - பொதுமக்கள் அவதி
மன்னர் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் 1348 ஆவது சதய விழா திருச்சி பாரதிதாசன் சாலையில் அமைந்துள்ள அவரின் திரு உருவ சிலைக்கு அரசு சார்பில் தமிழ்நாடு அமைச்சர் மெய்யநாதன், மாநகர மேயர் அன்பழகன், மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் வளர்மதி, பரஞ்சோதி, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தெற்கு மாவட்ட செயலாளருமான குமார் உள்ளிட்ட அதிமுக முன்னாள் நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்களும், காங்கிரஸ் கட்சி சார்பில் திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் முத்தரையர் சிலைக்கு மாலை அணிவித்தனர்.
திருச்சி மாநகராட்சி வாயில் முன்னதாக போலீசார் தடுப்பு வேலிகளை அமைத்திருந்தனர். அப்பொழுது திமுக சார்பில் சட்டமன்ற உறுப்பினர்கள் கதிரவன், காடுவெட்டி தியாகராஜன் உள்ளிட்ட திமுகவினரின் கார்களும், முன்னாள் அமைச்சர் வளர்மதி, பரஞ்சோதி உள்ளிட்ட அதிமுகவினர் ஒரே சமயத்தில் நுழைய முற்றபட்டதால் பத்து நிமிடம் இரண்டு வாகனங்களுக்கும் இடையே ஒலிகளை எழுப்பி வாக்குவாதம் காவல் துறையினரிடம் நடத்தினர்.
பின்பு அவர்களை காரில் இருந்து இறங்கி செல்லுமாறு காவல்துறையினர் வலியுறுத்தினர். அதிமுக முன்னாள் அமைச்சர்கள் நடந்து வந்தனர். திமுகவினர் தங்களது கார்களை ஒலி எழுப்பி உள்ளே நுழைந்ததால் சிறிது நேரம் பரபரப்பானது.
இதனால் சிலை அமைந்துள்ள ஒத்தக்கடை பகுதியில் முழுவதும் வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. காலை நேரத்தில் வேலை செல்பவர்கள் அனைவரும் மிகுந்த சிரமப்பட்டுள்ளனர். இரு சக்கர வாகனங்கள் கூட இப்பகுதியில் அனுமதி கிடையாது. திருச்சி மாநகரின் முக்கிய சாலைகளான கண்டோன்மெண்ட், நீதிமன்றம் சாலை உள்ளிட்ட பகுதியில் மிகுந்த போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLG
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn