கள்ள ஓட்டு போட்ட கல்லூரி மாணவர்கள் நான்கு பேர் சிக்கிய சம்பவம்

கள்ள ஓட்டு போட்ட கல்லூரி மாணவர்கள் நான்கு பேர் சிக்கிய சம்பவம்

மண்ணச்சநல்லூர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கதிரவன் தனலட்சுமி கல்லூரி மாணவர்கள் மாணவிகளுக்கு பொய்யான வாக்காளர் அட்டைகளை  அடித்து தந்து இனாம் சமயபுரத்தில் 800க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு திமுகவில் கள்ள ஓட்டுகள் பதிவு செய்ய ஏற்பாடு செய்ததாக தகவல் பரவி வருகிறது.

இதையடுத்து இனாம் சமயபுரம் வாக்குச்சாவடி எண் 147 இரண்டு கல்லூரி மாணவர்கள் வேறு ஒரு பகுதியை சேர்ந்தவர்கள் அங்கே வாக்களிக்க முயற்சி செய்துள்ளனர் மேலும் இருவர் வாக்களித்து உள்ளனர் அவர்களை பிடித்து தற்பொழுது காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர் அதிமுகவினர் திமுக வேட்பாளர் கதிரவன் மீது புகார் அளித்துள்ளனர்.

இனாம் சமயபுரம் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் அதிமுக கட்சிக்காரர்களும் கையும் களவுமாக 3  பெண்களையும் 3 ஆண்களையும்  பிடித்த போது அவர்கள் சொன்ன பதில் நாங்கள் லால்குடி என்று சொன்னார்கள் .அப்போது நீங்கள் எங்கிருந்து வந்தீர்கள் என்று கேட்ட போது தனலட்சுமி சீனிவாசன் காலேஜ் இல் இருந்து வந்திருக்கிறோம் என்று ஒப்புக்கொண்டனர்.

 போலி வாக்குகளை பதிவு செய்யும் போது வேலுசாமி, மருதுபாண்டி ஆகிய இருவரை பிடித்து சமயபுரம் காவல்நிலையத்தில் அதிமுக ஒன்றிய செயலாளர் ஜெய்குமார் உள்ளிட.ட நிர்வாகிகள் ஒப்படைத்தனர்.கள்ள ஓட்டுப்போட கல்லூரி மாணவர்களே பயன்படுத்தியதால் மண்ணச்சநல்லூர் தொகுதியில் பரபரப்புடன் காணப்படுகிறது

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய

https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr