திருச்சி மாநகராட்சி தேர்தல் அதிமுக அதிக இடங்களில் போட்டி

திருச்சி மாநகராட்சி தேர்தல் அதிமுக அதிக இடங்களில் போட்டி

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டதையடுத்து அனைத்து கட்சிகளும் பரபரப்புடன் தங்களது கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை துவங்கி உள்ளது. 10 மணி நேரத்துக்கும் மேலாக திமுக பேச்சுவார்த்தை நடத்தி கொண்டிருக்கிறது. ஆனால் அதிமுக எந்த பரபரப்பும் ஆரவாரமின்றி அமைதியாக தொகுதி பங்கீடு குறித்து பேசி வருகிறது .திருச்சி மாநகராட்சி தேர்தலில் அதிமுக முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் கைவசம் 45 வார்டுகள் உள்ளது.

மற்றொரு மாவட்ட செயலாளர் குமாரிடம் 13 வார்டுகளும் ,மாவட்ட செயலாளர் பரஞ்சோதியிடம் 7 வார்டுகளும் உள்ளது. அதிமுக தலைமையை பொறுத்தளவில் 85% தாங்கள் போட்டியிடுவதாகவும் மீதமுள்ளதை கூட்டணி கட்சி கொடுப்பதாகவும் அறிவித்துள்ளது. இதை வைத்து பார்க்கும் பொழுது திருச்சி மாநகராட்சி 65 வார்டுகளில் அதிமுகவும் 50 வார்டுகளில் போட்டியிட வாய்ப்பு உள்ளது. மீதி உள்ள 15 வார்டுகளை பாஜக மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ்க்கு ஒதுக்கீடு செய்ய வாய்ப்பு உள்ளது .

அதிமுக முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜனிடம் உள்ள 45 வார்டில் 38 வார்டுகள் அதிமுக களம் காண உள்ளதாக தெரிகிறது.இதே போல் மற்ற இரண்டு மாவட்ட செயலாளர்களிடம் உள்ள 20 வார்டுகளில் 12 வார்டுகளை தன் வசம் வைத்து மீதி கூட்டணிக்கு ஒதுக்க வாய்ப்பு உள்ளது.மொத்தத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல்  களம் சூடுபிடித்துள்ளது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....

https://chat.whatsapp.com/FrMhB48CtP5DIvpG3AUAT0

#டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn