வாக்காளர்கள் வாக்களிப்பதன் அவசியம் குறித்து ஆவின் பால் பாக்கெட்டுகளில் விழிப்புணர்வு வாசகம்
வாக்காளர்கள் வாக்களிப்பதன் அவசியம் குறித்து
ஆவின் பால் பாக்கெட்டுகளில் விழிப்புணர்வு வாசகம்- திருச்சி மாவட்ட தேர்தல் அதிகாரி
பொதுமக்களுக்கு வழங்கி துவக்கி வைத்தார்.
தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தல் 2021 ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறவுள்ளதையொட்டி திருச்சி கண்டோண்மெண்ட் ஐயப்பன் கோவில் முன்பு ஆவின் பால் பாக்கெட்டுகளில் 100 சதவீதம் வாக்காளர்கள் வாக்களிப்பதன் அவசியம் குறித்து
பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நோட்டீஸ் மற்றும் ஆவின் பால் பாக்கெட்டுகளில் அச்சடிக்கப்பட்டுள்ளதை மாவட்ட தேர்தல் அதிகாரி மற்றும் ஆட்சித்தலைவர் சிவராசு இன்று பொதுமக்களுக்கு வழங்கினார்.
ஆவின் பால் பாக்கெட்டுகளில் வாக்களிப்பது நமது கடமை, தேர்தல் நாள் 06.04.2021 என்று அச்சடிக்கப்பட்டுள்ளதை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும்
ஆட்சித்தலைவர் சிவராசு பொது மக்களுக்கு வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரி.... திருச்சி மாவட்டத்தில் வாக்களார்கள் நேர்மையாகவும்,
நியாயமாகவும், வாக்களிப்பது ஜனநாயக கடமை என்பதை விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 100 சதவீதம் வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மாவட்ட நிர்வாகத்தின் மூலம் துண்டு பிரசுரங்கள், அதிநவீன மின்னணு
வாகனம் மூலம் தேர்தல் விழிப்புணர்வு 2021 குறித்த குறும்படங்கள் போன்ற
பல்வேறு நிலைகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
படித்தவர்கள் மத்தியில், வாக்களப்பு சதவீதம் குறைவாக உள்ளதாலும், கிராமபுறங்களை விட
நகர் புறங்களில் வாக்கு சதவீதம் குறைவாக உள்ளதாலும், இதனை மேம்படுத்தும் வகையில், இன்று முதல் ஆவின் பால் பாக்கெட்டுகளில், வாக்களிப்பதன் அவசியம்
குறித்து விழிப்புணர்வு வாசகமாக தேர்தல் நாள் ஏப்ரல் 6ஆம் தேதி என்று அச்சிடப்பட்டு இன்று முதல் பொது மக்களுக்கு வினியோகிக்கப்படும்.
தேர்தல் நடைபெறும் வரை ஆவின் பால் பாக்கெட்டுகளில் இது போன்ற வாசகங்கள் இடம் பெறும் என்று தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் ஆவின் பொதுமேலாளர் ரசிகலா,
திருச்சி வருவாய் கோட்டாட்சியர் விஸ்வநாதன் மற்றும் பலர்
உடன் இருந்தனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/Cs9s0CdOqXmGS1SrcL2f9I
https://chat.whatsapp.com/Cs9s0CdOqXmGS1SrcL2f9I