சுதந்திர தினவிழாவில் புத்தக கண்காட்சி குறித்த விழிப்புணர்வு

சுதந்திர தினவிழாவில் புத்தக கண்காட்சி குறித்த விழிப்புணர்வு

நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு முதற்கட்டமாக 111 மாணவர்களுக்கு செப்டம்பர் 16 "திருச்சி எழுத போகும் புதிய வரலாறு" புத்தக கண்காட்சியில் புத்தகம் வாங்க தலா 100 வீதம் 11100 ரூபாய் வழங்கி புத்தக கண்காட்சி குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி சுப்பையா நடுநிலைப்பள்ளி அசத்தல்.இந்தியத் திருநாட்டின் 75வது சுதந்திர தின அமுதப் பெருவிழா தென்னூர் சுப்பையா நினைவு நடுநிலைப்பள்ளியில் மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டது. பள்ளி தலைமையாசிரியர்  K.S. ஜீவானந்தன் முன்னிலையில், லயன்ஸ் கிளப் ஆப் திருச்சிராப்பள்ளி மிட் டவுன் தலைவர்  ரத்னகுமார் அவர்கள் தேசியக்கொடி ஏற்றினார்.

சிறப்பு விருந்தினராக லயன்ஸ் கிளப் முன்னாள் ஆளுநரும், கோனார் தமிழ் நோட்ஸ் உரிமையாளர் செல்லப்பன் அய்யா அவர்கள் தமது (92வது வயது) சிறப்புரையில் காந்தியை இரண்டு முறை நேரில் பார்த்து பேசியது குறித்து பேசினார். PLA பஸ் நிறுவனங்களின் உரிமையாளர் மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

திருச்சி எழுத போகும் புதிய வரலாறு புத்தக கண்காட்சியில்மாணவர்கள் புத்தகம் வாங்க ஏதுவாக சுதந்திர தினமான இன்று வருகை தந்த 111 மாணவர்களுக்கு முதற்கட்டமாக தலா ரூபாய்.100 வீதம் 11100 ரூபாய் சுருளி முருகன் ஆசிரியர் (ஓய்வு) அவர்களால் வழங்கப்பட்டது.

75வது சுதந்திரதினத்தை முன்னிட்டு பள்ளி வளாகத்தில் இயற்கையை நேசிக்க மரக்கன்று நடப்பட்டது. மேலும் பள்ளி மாணவர்கள் குழு நடனம், யோகா, பேச்சு இவற்றில் பங்கேற்று பரிசுகளைப் பெற்றனர்.தினமலர் நாளிதழில் இன்று வெளிவந்த சுதந்திர போராட்ட செய்திகளை மாணவர்கள், பெற்றோர்கள் பார்த்து படித்து மகிழ்ந்தனர். மாணவர்களுக்கு சுவையான  பிரியாணி, இட்லி, வடை, வெண்பொங்கல், கேசரி, பூரி, காபிஉள்ளிட்டவை வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் திரளாக பெற்றோர்கள், முன்னாள் மாணவர்கள் உள்பட 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் சரண்யா, லில்லி, மீனா, உஷாராணி உள்ளிட்டோர் செய்து இருந்தனர். ஆசிரியை த சகாயராணி நன்றி கூறினார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய... https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm

#டெலிகிராம் மூலமும் அறிய.. https://t.co/nepIqeLanO