ஸ்ரீரங்கம் கோவில் சித்திரை தேர் திருவிழா பக்தர்களின்றி கொடியேற்றம்

ஸ்ரீரங்கம் கோவில் சித்திரை தேர் திருவிழா பக்தர்களின்றி கொடியேற்றம்

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் நடைபெறும் விருப்பன் திருநாள் எனப்படும் சித்திரை தேர் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது.

அதிகாலை 4 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு செய்யப்பட்டு கொடியேற்ற மண்டபம் வந்த பிறகு கொடியேற்றம்  துவங்கியது. பின்னர் நம்பெருமாள் கண்ணாடி அறை சென்றடைந்தார்.

11 நாட்கள் நடைபெறும் சித்திரை தேர் திருவிழா நிகழ்வுகளில் ஒவ்வொரு நாளும் நம் பெருமாள் புறப்பாடாகி வெவ்வேறு வானங்களில் திருவீதி உலா நடைபெறும். ஆனால் தற்போது கோவிட் தொற்று இரண்டாம் அலை காரணமாக கோவிலுக்குள் இந்நிகழ்வுகள் நடைபெறும்.

முக்கிய திருவிழாவான (09.05.2021) சித்திரைத் தேர்த்திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் யாரும் இன்றி சித்திரை தேர் திருவிழா ஒவ்வொரு நாளும் கோவில் அதிகாரிகள் மற்றும் பட்டர்கள் முன்னிலையில் கோவிலுக்குள் நடைபெறும் என கோவில் இணை ஆணையர் தெரிவித்துள்ளார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF