திருச்சி மாநகரில் வசிக்கும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு மறுவாழ்வு கலந்தாய்வு நிகழ்ச்சி!!

திருச்சி மாநகரில் வசிக்கும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு மறுவாழ்வு கலந்தாய்வு நிகழ்ச்சி!!

திருச்சி மாநகர காவல் ஆணையர் லோகநாதன் தலைமையில் மூன்றாம் பாலினத்தவர்களின் அமைப்பை சார்ந்தவர்களுடன் கலந்தாய்வு கூட்டம் நடத்தினார். 

Advertisement

இதில் அவர்களுக்கிடையே ஏற்படும் பிரச்சினை மற்றும் பொது இடங்களில் குறிப்பாக பஸ் நிலையங்கள் ‌போன்ற இடங்களில் நடந்து கொள்ளும் முறையை பற்றியும், குற்ற‌நடவடிக்கைகள் நடக்காமல் தடுப்பதற்கு எவ்வாறு காவல்துறையினருக்கு உதவுவது பற்றிய ஆலோசனை நேற்று மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நடத்தினார்கள்.

இந்நிகழ்ச்சியில் திருச்சி மாநகர காவல் ஆணையர் தலைமை தாங்கி அவர்களது குறைகளை கேட்டு ஆலோசனைகளையும் வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியில் திருச்சி மாநகர துணை ஆணையர்கள், சட்டம் மற்றும் ஒழுங்கு, போக்குவரத்து மற்றும் குற்றப்பிரிவு, கூடுதல் காவல் துணை ஆணையர், மாவட்ட சமூக நல அலுவலர், மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தினர், மாவட்ட திறன் மேம்பாட்டு பயிற்சி அலுவலக உதவி இயக்குநர், உதவி பயிற்சி அலுவலர், அந்தநல்லூர் மாநகராட்சி நிர்வாக அலுவலர், தமிழ்நாடு மூன்றாம் பாலினத்தவர் நலவாரிய உறுப்பினர், பல்வேறு திருநங்கை சங்க பொறுப்பாளர்கள் மற்றும் மாநகர அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர்கள் ஆகியோர் பங்கேற்றார்கள்.