திருச்சியில் 76 வது சுதந்திர தினம் மாவட்ட ஆட்சியர் தேசியக்கொடியேற்றி நலத்திட்ட உதவிகள் வழங்கினார்
நாட்டின் சுதந்திரம் பெற்று 75 ஆண்டு முடிந்து 76 வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் 75 ஆண்டுகள் நிறைவு பெற்றது ஒட்டியும் மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு கொண்டாட்டங்களை வெளிப்படுத்தினார்கள். இந்நிலையில் இன்று 76 வது சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் மூவர்ண பலூன்களை பறக்கவிட்டு காவல்துறை அணிவகுப்பு மரியாதை ஏற்றுக் கொண்டார்.
பின்னர் 25 பயனாளிகளுக்கு 25 லட்சத்து 41ஆயிரத்து 532 மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. மேலும் மருத்துவம், காவல்துறை, தீயணைப்பு துறை உள்ளிட்ட அரசு துறையைச் சார்ந்த 318 பேருக்கு நற்சான்றிதழ்கள் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
இதனை தொடர்ந்து பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளின் நடன நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நாட்டுப்பற்றை போற்றும் வகையில் மூவர்ண ஆடையுடன் நடனமாடி பார்வையாளர்களை கவர்ந்தனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய... https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO