தமிழ்நாடு பத்திரிக்கையாளர்கள் சங்கம் மாநில நிர்வாகக்குழு கூட்டம்

தமிழ்நாடு பத்திரிக்கையாளர்கள் சங்கம் மாநில நிர்வாகக்குழு கூட்டம்

தமிழ்நாடு யூனியன் ஆப் ஜர்னலிஸ்ட்டின் மாநில நிர்வாகக் குழு கூட்டம் திருச்சி டி எம் எஸ் எஸ் பில்டிங்கில் நடைபெற்றது. நிகழ்விற்கு மாநிலத் தலைவர் பி எஸ் டி புருஷோத்தமன் தலைமை தாங்கினார். மாநில பொதுச் செயலாளர் போளூர் சுரேஷ், கே முத்து,மாநில பொருளாளர் வி ரவிச்சந்திரன், மாநில துணைத்தலைவர் ஆர் வளையாபதி, மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் டேவிட் குமார், மாநில அமைப்பு செயலாளர் தமிழ்ச்செல்வன், மாநில இணை செயலாளர் ஏ லட்சுமணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருச்சி மாவட்ட தலைவர் ஏ டி சுகுமார் அனைவரையும் வரவேற்றார்.

கூட்டத்தில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு ஆலோசனைகளையும், தங்களது கருத்துகளையும் வழங்கினர். விவாதங்களுக்கும் கருத்துரைகளுக்கும் பிறகு மாநில தலைவர் பி எஸ் டி புருஷோத்தமன் சிறப்புரை ஆற்றினார். பின்னர் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. திருச்சி மாவட்ட உறுப்பினர் மன்னச்சநல்லூர் திரு சுப்பிரமணியன் மறைவிற்கும்,நியூஸ் தமிழ் செய்தி வாசிப்பாளர் சௌந்தர்யா மறைவிற்கும், வலங்கைமான் தினமலர் செய்தியாளர் செல்வராஜ் மறைவிற்கும், கும்பகோணம் ஜெயா டிவி செய்தியாளர் இளங்கோ மறைவிற்கும், கள்ளக்குறிச்சி விஷ சாராயத்தினால் மறைந்த அனைவருக்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

பணியில் இருக்கும் போதே செய்தியாளர்கள் உயிரிழப்பது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மறையும் பத்திரிகையாளர்களுக்கு அரசு வழங்கும் நிதி உதவியினை உடனடியாக வழங்குமாறு இக்கூட்டம் வலியுறுத்துகிறது. அனைத்து மாவட்டங்களிலும் உள்ள தாலுகா செய்தியாளர்களை பத்திரிகையாளர் நல வாரியத்தில் உடனடியாக இணைக்க தமிழக அரசை இக்கூட்டம் வலியுறுத்துகிறது. ஓய்வூதிய நிபந்தனைகளை தளர்த்துவதுடன், பத்திரிக்கையாளர் சங்கங்கள் தரும் சான்றிதழினை ஏற்று விண்ணப்பிக்கும் பத்திரிக்கையாளர்க்கு ஓய்வூதியம வழங்க இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

பத்திரிகையாளர்கள் பணியின்போது மறைந்தால் வழங்கும் 5 லட்சத்தினை 10 லட்சமாக உயர்த்தி வழங்க இக்கூட்டம் தமிழக அரசு வலியுறுத்துகிறது. தர்மபுரி மாவட்டம் வரும் ஆகஸ்ட் 27ஆம் தேதியும், கள்ளக்குறிச்சி, திருவாரூர் மாவட்டங்கள் உடனடியாக தங்களது பேரவை கூட்டங்களை விரைவில் நடத்த இக்கூட்டம் வலியுறுத்துகிறது. செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மதுரை, இராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் இயக்கத்தை பலப்படுத்த நிர்வாகிகளை இக்கூட்டம் கேட்டுக கொள்கிறது.

மாநில துணைத்தலைவர் V. மோகன் மற்றும் மாநில இணை செயலாளர் R துரைக் கண்ணு ஆகியோர் தங்கள் உடல்நிலை கருத்தில் கொண்டு, தங்களை மாநிலப் பொறுப்பில் இருந்து விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை விடுத்ததை ஒட்டி அவர்களை இக்கூட்டம் மாநில பொறுப்புகளில் இருந்து இருவரையும் விடுவிக்கிறது. மாநில அமைப்புச் செயலாளராக இருந்த கிறிஸ்டோபர் சங்கத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டதால் அவரை இக்கூட்டம் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் மாநில நிர்வாகி பொறுப்பில் இருந்து உடனடியாக நீக்குகிறது.

மாநில அமைப்பு செயலாளராக சிறப்பாக பணியாற்றி வரும் தர்மபுரி A தமிழ்ச்செல்வன் மாநில துணைத்தலைவராக இக்கூட்டம் நியமிக்கிறது. திருவண்ணாமலை மாவட்ட பொருளாளராக செயல்பட்டுக் கொண்டிருக்கும் செய்யாறு பி நடராஜன் மாநில அமைப்பு செயலாளராக நியமிக்கப்படுகிறார். திருச்சி மாவட்ட உறுப்பினர் மன்னச்சநல்லூர் சுப்பிரமணியம் மறைவிற்கு மாநில மையம் இறுதிச்சடங்கிற்கு ரூபாய் பத்தாயிரம் வழங்கியதற்கு இக்கூட்டம் ஒப்புதல் அளிக்கிறது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.மாநில துணைத்தலைவர்  ஆர் வளையாபதி நன்றி கூறினார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/Cs9s0CdOqXmGS1SrcL2f9I

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision