திருச்சியில் தற்காலிக பட்டாசு விற்க, இருப்பு வைத்துக் கொள்ள உரிமம் கோரி விண்ணப்பிக்க கால அவகாசம்

திருச்சியில் தற்காலிக பட்டாசு விற்க, இருப்பு வைத்துக் கொள்ள உரிமம் கோரி விண்ணப்பிக்க கால அவகாசம்

எதிர்வரும் 04.11.2021 அன்று தீபாவளி 
பண்டிகை-2021 கொண்டாடப்படுவதை முன்னிட்டு திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் புதிய தற்காலிக பட்டாசு சில்லறை வணிகம் செய்ய, இருப்பு வைத்துக் கொள்ள உரிமம் கோரும் விண்ணப்பங்களை இ-சேவை மையங்களில் இணையதளம் மூலம் வெடிமருந்து சட்டம் மற்றும் விதிகள் 2008க்குட்பட்டு, உரிய ஆவணங்களுடன் 30.09.2021-க்குள் விண்ணப்பித்துக் கொள்ள கால அவகாசம் வழங்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வரும் 22.10.2021வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நேர்வில் புதிய தற்காலிகப் பட்டாசு சில்லறை வணிகம் செய்ய, இருப்பு வைத்துக் கொள்ள உரிமம் கோரும் விண்ணப்பங்களை 22.10.2021-க்குள் இ-சேவை மையங்களில் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டியது.

22.10.2021-க்கு பின்னர் அளிக்கப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது என்று மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு தெரிவித்துள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/EAKTE8CG371C7uSS3EIUus

டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn