ஸ்வீடன் மாணவர்களுடன் திருச்சி மாநகர காவல் ஆணையர் கலந்துரையாடல்

ஸ்வீடன் மாணவர்களுடன் திருச்சி மாநகர காவல் ஆணையர் கலந்துரையாடல்

சுவீடன் நாட்டில் Internationella Gymnasiet. Uppsala Sweden பள்ளியை சேர்ந்த 12ம் வகுப்பு பள்ளி மாணவ மாணவியர் மற்றும் ஆசிரியர்கள் கடந்த 27.03.23தேதி 11 நாட்கள் பயணமாக Youth Exnors International அமைப்பின் மூலம் இந்தியா சுவீடன் கல்வி கலச்சார பரிமாற்ற குழு இந்தியா நாட்டிற்கு வந்தது. இக்குழுவை சந்தானம் மற்றும் சங்கரி ஆகியோர்கள் ஒருங்கிணைத்தார்கள்.

இந்தியா சுவீடன் கல்வி கலச்சார பரிமாற்ற குழு இந்தியா பயணத்தின் ஒரு பகுதியாக நேற்று 03.04.23தேதி மாலை 06.00மணியளவில் திருச்சி மாநகர காவல் ஆணையரகத்தில் இந்தியா சுவீடன் ஆகிய இருநாடுகளுக்கு இடையேயான கல்வி மற்றும் கலாச்சார பரிமாற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியானது திருச்சி மாநகர காவல் ஆணையர் M.சத்தியப்பிரியா,  தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் சுவீடன் நாட்டை சேர்ந்த பள்ளி ஆசிரியர்கள் Tr.Frendrick Lund, Tmt.Karin Ohlson மற்றும் 11 சுவீடன் நாட்டு 12ம் வகுப்பு பள்ளி மாணவ மாணவியர் கலந்து கொண்டார்கள். மேற்கண்ட நிகழ்ச்சியை Youth Exnora International அமைப்பின்  நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் மோகன்  ஒருங்கிணைத்ததார்.

இந்நிகழ்ச்சியில், திருச்சி மாநகர காவல் ஆணையர்  சுவீடன் நாட்டு பள்ளி மாணவ மாணவியரின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். குறிப்பாக தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பு, குழந்தைகளின் ஆரோக்கியம் கல்வி, மேலும் தமிழக காவல்துறையில் பெண்களின் பங்கு, இந்தியாவின் கல்வி கலாச்சாரம் பெருமை குறித்து சுவீடன் மாணவ மாணவியருக்கு எடுத்துரைத்தார்கள். மேலும் தமிழக காவல்துறையின் ஒட்டுமொத்த செயல்பாடுகள், முக்கியத்துவம், சமூகத்தில் பொறுப்பு குறித்து விளக்கி கூறுகினார்கள். மேலும் காவல்துறையினரின் பணிகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து சென்னையில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியா நிகழ்வில் திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்கள் பணியாற்றிபோது ஏற்ப்பட்ட அனுபவத்தை அவர்களுடன் பகிர்ந்து கொண்டும், நிகழ்ச்சி குறித்து குறும்படத்தை காட்டி தமிழகத்தின் பெருமையை எடுத்துரைத்தார்.

சுவீடன் நாட்டிலிருந்து இந்தியா வந்து கல்வி மற்றும் கலச்சாரத்தை பயில வந்த மாணவ மாணவியர் மற்றும் ஆசிரியர்களுக்கு தன்னுடைய வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார்.

மேலும் நிகழ்ச்சிபின் இறுதியில், சுவீடன் பள்ளி மாணக்கர்கள் கூறுகையில், இந்தியா பயணத்தின்போது ஒருபகுதியாக திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்களிடம் கலந்துரையாடியது மிகவும் பயனுள்ளதாகவும், தமிழக காவல்துறை மீது நம்பிக்கையும், பெருமை கொள்ளும் விதமாக இருந்ததாக தெரிவித்தார்கள்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய

 https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

 

டெலிகிராம் மூலமும் அறிய....

  https://t.me/trichyvisionn