நாளை (04.08.2022) நாட்டுக்கோழி வளர்ப்பு இலவச பயிற்சி

நாளை (04.08.2022) நாட்டுக்கோழி வளர்ப்பு இலவச பயிற்சி

திருச்சி கொட்டப்பட்டு கோழி பண்ணை சாலையில் செயல்பட்டு வரும் கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் நாளை (04.08.2022) நாட்டுக்கோழி வளர்ப்பு இலவச பயிற்சி நடைபெற உள்ளது.

இந்த பயிற்சியில் நாட்டுக்கோழி இனங்கள் தரம் உயர்த்தப்பட்ட நாட்டுக்கோழி இனங்கள் நாட்டுக்கோழி வளர்ப்பு தீவன மேலாண்மை, சிறிய குஞ்சு பொரிப்பானில் முட்டைகளை பொரித்தல், குஞ்சுகளை பறவைக்கூட்டில் வளர்த்தல்,

முறையான பராமரிப்பு நோய் தடுப்பு முறைகள் பற்றிய பயிற்சி அளிக்கப்படும் என்று திருச்சி கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத் தலைவர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.


#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய... https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO