வரலாறு படைத்திட வரலாறு படித்திடு பிஷப் ஹீபர் கல்லூரியின் வழிக்காட்டி கட்டுரை

வரலாறு படைத்திட வரலாறு படித்திடு பிஷப் ஹீபர் கல்லூரியின் வழிக்காட்டி கட்டுரை

வரலாறு என்பது கடந்த கால பதிவுகள் மட்டும் இல்லை, ஆதிகாலம் தொட்டு வாழ்ந்த மக்களின் வாழ்க்கை முறை, பண்பாடு, கலாச்சாரம், இனம் சார்ந்த ஒட்டுமொத்த வாழ்வியலின் தொகுப்பாகும். வரலாற்றினைக் கொண்டு நாளைய எதிர்காலம் கட்டமைக்கப்படுகிறது. எனவே வரலாற்றைப் படிப்பது மிகவும் அவசியமாகிறது. பன்னிரண்டாம் வகுப்பு  முடித்துவிட்டு, வேலை வாய்ப்புள்ள எந்த பாட துறையை தேர்ந்தெடுப்பது என்று  தெரியாமல் இருக்கும் மாணவர்களுக்கும், இளங்கலை முடித்து மேற்படிப்பிற்காக காத்திருக்கும் மாணவர்களுக்கும் ஒரு வழிகாட்டியாக  இந்தக் கட்டுரை கண்டிப்பாக இருக்கும்.

வெறும் ஏட்டுக்கல்வி சார்ந்து மட்டுமல்லாமல், நம் வரலாற்றை மற்றும் பிற நாடுகளின் வரலாற்றையும்  பயின்று, பயிற்சி  பெற்று ,  பள்ளி, கல்லூரிகளில் பணியாற்றவும், குடிமையில், சுற்றுலாத்துறை, கலாச்சாரத்துறை, தொல்லியல் துறை, தொல்பொருள் காட்சியகம், வழக்கறிஞர், அகழ்வாராய்ச்சி,  அறநிலை துறைகள், பணிகளில்   பணியாற்றிட வேலைவாய்ப்புகள் காத்திருக்கின்றன. UPSC, TNPSC, GROUP- I தேர்வு எழுதுவதற்கு 60 சதவீதம்  கேள்விகளை உள்ளடக்கிய பாடமாக வரலாற்றுப் பாடம்  விளங்குகிறது. தமிழ் நாட்டில்  தலைசிறந்த  கலை அறிவியல் கல்லூரிகளில் முதன்மையான 10 இடங்களுக்குள் இடம் பிடித்திருப்பது பிஷப் ஹீபர் கல்லூரி. 

இந்தக் கல்லூரியின் வரலாற்றுத் துறையில் இளங்கலை பட்டப்படிப்பு (B.A.,) முதுகலை பட்டப்படிப்பு (MA.,)  Diploma in Tourism. சுற்றுலாவியல் (இளங்கலை பட்டயப் படிப்பு) சிறப்பான முறையில் பயிற்றுவிக்கப்படுகிறது. பிஷப் ஹீபர் கல்லூரி, வரலாற்று துறையில் படித்தவர்கள் இந்திய குடிமையியல் பணிகளிலும், கல்லூரி மற்றும் பல்கலைக்கழக பேராசிரியர்களாகவும், சினிமா துறையிலும், அரசியலிலும் கோலோச்சி வருகின்றனர். எந்த இளங்கலை பட்டப் படிப்புகளை முடித்திருந்தாலும், முதுகலை வரலாற்று துறையில் சேர்ந்து முதுகலை பட்டம் பெறலாம். முதுகலை பட்டப்படிப்பு படித்து கொண்டிருக்கும் போது NET,  SET மற்றும் UPSC தேர்வுகள் எழுதுவதற்கான பயிற்சி இலவசமாக அளிக்கப்படுகிறது. 

முதுகலை பட்டப்படிப்பு முடித்த பிறகு, இளங்கலை கல்வியியல் முடித்தால் ஏராளமான வேலை வாய்ப்புகள் காத்திருக்கிறது. இன்றைய சூழ்நிலையில், சமூக அறிவியல் பாடங்கள் நடத்துவதற்கு, முறையான வரலாறு படித்த ஆசிரியர்கள் இல்லை என்ற நிலையே இருக்கிறது. பன்னாட்டு பள்ளிகள், CBSE, மெட்ரிகுலேஷன் மற்றும் மாநில அரசால் நடத்தப்படும் பள்ளிகளில் சமூக அறிவியல் ஆசிரியர்களுக்கான தேவை மிகவும் இருக்கிறது. எனவே எதிர்கால மாணவ சமுதாயத்தினர் இந்த கல்வி வாய்ப்பினை பயன்படுத்தி பயனடைவீர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/BghqgpbVivc35SvK8d6SOF