மணப்பாறை அருகே 100 நாள் வேலை பணியாளர்கள் சாலை மறியல்

மணப்பாறை அருகே 100 நாள் வேலை பணியாளர்கள் சாலை மறியல்

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த அமையபுரம் ஊராட்சி ஆனையூரில் 100 நாள் பணியாளர்களுக்கு வியாழக்கிழமை முதல் நிகழாண்டு பணிகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் வேலை தொடங்கிய இரண்டு நாட்களில் அப்பகுதியில் ஒரு குழுவிற்கு மட்டும் வேலை இல்லை எனக்கூறி ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் திருப்பி அனுப்பியுள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள் மணப்பாறை – கரூர் சாலையில் வேலை செய்யும் உபகரணங்களுடன் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அவ்வழி சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவலறிந்து நிகழ்விடத்துக்கு சென்ற வையம்பட்டி ஒன்றிய பெருந்தலைவர் குணசீலன், ஊராட்சி மன்ற தலைவர் தேவராஜ், அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் மணமல்லி ஆகியோர் மறியலில் ஈடுபட்ட பெண்களிடம் சமரசம் பேசி உடனடியாக பணிகள் வழங்குவதாக உறுதி அளித்ததையடுத்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/BghqgpbVivc35SvK8d6SOF