திருச்சியில் 95 லட்சம் மதிப்புள்ள தங்கம் மற்றும் வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல்

திருச்சியில் 95 லட்சம் மதிப்புள்ள தங்கம் மற்றும் வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல்

திருச்சி சர்வதேச பன்னாட்டு விமான நிலையத்திற்கு சிங்கப்பூர், மலேசியா, துபாய், இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலிருந்து விமானங்கள் வந்து செல்கிறது. இதில் பயணிகள் தங்கம் கடத்தி வருவது தொடர் கதையாக இருந்து வருகிறது. திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு துபாயிலிருந்து வந்த ஏர் இந்தியா விமானத்தில் சந்தேகத்துக்கிடமான பயணம் செய்த

ஆண் பயணியின் உடைமைகளை சோதனை செய்த போது Nestle சாக்லேட் பவுடரில்  மறைத்து கடத்தி வரப்பட்ட 211 கிராம் எடையுள்ள தங்க கட்டி மற்றும் 386 கிராம் எடையுள்ள 3 தங்க செயின்களை ஆகியவற்றை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட மொத்த தங்கத்தின் மதிப்பு 21 லட்சத்து 55 ஆயிரத்து 038 ரூபாய் ஆகும்.

இதே போன்று திருச்சி விமான நிலையத்தில் இருந்து ஸ்கூட் ஏர்வேஸ் விமானத்தில் பயணம் செய்யவிருந்த பயணிகளை வாண் நுண்ணறிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமான ஆண் பயணியின் கைப்பையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 80 ஆயிரம் யுஸ் டாலர், 10 ஆயிரம் யூரோ வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்திய ரூபாயின் மதிப்பு 74 லட்சத்து 19 ஆயிரம் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn