அளுந்தூர் முத்துமாரியம்மன் கோவிலில் பங்குனி திருவிழா - பக்தர்கள் நேர்த்திக்கடன்

அளுந்தூர் முத்துமாரியம்மன் கோவிலில் பங்குனி திருவிழா - பக்தர்கள் நேர்த்திக்கடன்

திருச்சி மாவட்டம் மணிகண்டம் அருகே அளுந்தூரில் 18 பட்டி கிராமத்திற்கு பாத்தியப்பட்டதானாய் முளைத்த முத்துமாரியம்மன்கோவில் உள்ளது. இக்கோவிலில் பங்குனி திருவிழா கடந்த 12-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. அன்றிலிருந்து ஒவ்வொரு நாளும் கோவிலில் மண்டக படிதாரர்கள் சார்பில் அபிஷேக ஆராதனை நிகழ்ச்சி நடைபெற்று வந்தது.

தொடர்ந்து திங்கட்கிழமை கோவிலில் கிடர்வெட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவின் சிகர நிகழ்ச்சியான பக்தர்கள் அக்னி குண்டத்தில் இறங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதையொட்டி கோவில் அருகே உள்ள ஊரணி கரையில் இருந்து 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம், காவடி, அக்னி சட்டி, கரகம் எடுத்தும் அலகு குத்தியும் மேளதாளம் முழங்க ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர்.

பின்னர் கோவில் முன்பு அமைக்கப்பட்டிருந்த அக்னி குண்டத்தில் பக்தர்கள் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். விழாவில் அளுந்தூர், மணிகண்டம், சூரக்குடிபட்டி, பள்ளப்பட்டி, யாகப்படையன்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision