விநாயகர் ஊர்வலத்தில் ட்ரோன் பறக்கவிட்டவர்கள் மீது வழக்கு பதிவு - ட்ரோன் பறிமுதல்

விநாயகர் ஊர்வலத்தில் ட்ரோன் பறக்கவிட்டவர்கள் மீது வழக்கு பதிவு -  ட்ரோன் பறிமுதல்

திருச்சி மாநகரத்தில் கடந்த (09.09.2024)-ந் தேதி விநாயகர் சதுர்த்தி விழாவின் சிலை கரைப்பு (விசர்ஜனம்) ஊர்வலம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்றது. இதில் திருச்சி மாநகரில் வைக்கப்பட்ட சிலைகளை ஊர்வலமாக எடுத்து காவேரியாற்று பாலத்திலிருந்து விசர்ஜனம் செய்யப்பட்டது.

அப்போது Drone என்ற பொருளை வியாபார நோக்கில் பொதுமக்கள் அதிகமாக கூடியிருப்பது தெரிந்தும், அசட்டையாகவும், அஜாக்கிரதையாகவும் பயன்படுத்தியும், Trichy City Police Act நடைமுறையில் இருப்பது தெரிந்தும் உரிய அனுமதியின்றியும், வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் Civil Aviation முறை கடைபிடிக்காமல் டிரோன்களை பறக்கவிட்டு வீடியோக்களை பதிவு செய்தவர்களிடமிருந்து டிரோன்கள் பறிமுதல் செய்யபட்டது.

முறையான அனுமதி பெறாமல் டிரோன்களை பறக்கவிட்டவர்கள் மீது திருச்சி மாநகர காவல் ஆணையர் ந.காமினி சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்களின் உத்தரவின்பேரில், கோட்டை காவல்நிலைய குற்ற எண் : Cr.No.1143 & 1144/2024 u/s 289, 125 BND and section 11 of Air Craft Act r/w 50 of Drone Routes Act -2021 ன்படி - 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.

பின்னர், வழக்குகளின் எதிரிகள் சமயபுரம் மாகாளிகுடியை சேர்ந்த 1.அஸ்வின் குமார் (23) த.பெ.அசோக்குமார் மற்றும் லால்குடியை சேர்ந்த 2.ரகுராஜன் (32) த.பெ.அம்பிகாபதி ஆகியோர்கள் கைது செய்யப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்டார்கள்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision