புதுமணத் தம்பதிகள் ஏமாற்றம். தடையை மீறி திருச்சியில் ஆற்றகரையோரம் வழிப்பட்ட பொதுமக்கள் - விரட்டிய அடித்த போலீசார்
கொரோனா 3வது அலையை தொடக்கத்திலேயே கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் ஆடி மாதத்தில் திருக்கோயிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் பக்தர்கள் அதிகமாக கூடாமல் தடுப்பதற்கு அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் நடவடிக்கை எடுக்க தமிழக அரசு அறிவித்திருந்தது.
அதன்படி திருச்சி மாவட்டத்தில் முக்கிய கோயில்கள் அனைத்தும் நேற்றும், இன்றும் முழுவதுமாக பக்தர்களுக்கு அனுமதி ஆனது மறுக்கப்பட்டிருந்தது ஆகம விதிப்படி பூஜைகள் மட்டுமே நடைபெற்று வருகிறது. இன்று ஆடி மாதத்தில் முக்கிய விழாவாக இந்துக்கள் கொண்டாடப்படும் ஆடி பதினெட்டாம் பெருக்கு விழாவாகும். இந்நாளில் காவிரி கரையோரப் பகுதிகளில் காவிரி தாய்க்கு படையலிட்டு பூஜைகள் செய்வது வழக்கம்.
இதுமட்டுமின்றி புதுமணத் தம்பதிகள் தங்களது திருமண மாலைகள் ஆற்றில் விட்டு புதிய தாலிகளை மாற்றிக் கொள்வார்கள், இந்த ஆடிப்பெருக்கு விழா காவிரி கரையோர பகுதிகளில் வழக்கமாக வெகு சிறப்பாக கொண்டாடப்படும். ஆனால் இந்த ஆண்டு கொரோனா தடை உத்தரவு காரணமாக ஆடிப்பெருக்கு விழாவை காவிரி கரையோர பகுதிகளில் பொதுமக்கள் கொண்டாட மாவட்ட நிர்வாகம் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனால் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவேரிப் படித்துறை, அய்யாளம்மன் படித்துறை ஓடத்துறை படித்துறை உள்ளிட்ட காவிரிக் கரையோரப் பகுதிகள் களை இழந்து வெறிச்சோடி காணப்பட்டது. இதனால் ஆடிப்பெருக்கு விழா அன்று கோவில்களில் தரிசனம் மற்றும் கரையோரப் பகுதிகளில் கொண்டாட முடியாமல் போனதால் பக்தர்கள் மற்றும் புதுமண தம்பதிகள் மிகுந்த ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். இதற்கிடையில் மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவை மீறி மாம்பழச்சாலை பகுதியில் உள்ள காவிரி கரையோரத்தில் இறங்கி பொதுமக்கள் வழிபாடு நடத்தினர்.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் அங்கு இருந்தவர்களை உடனடியாக கலைந்து போகுமாறு சொல்லி அறிவுறுத்தி அங்கு இருந்தவர்களை விரட்டியடித்தனர். மேலும் இப்பகுதியில் பொதுமக்கள் வராத வண்ணம் காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது இதேபோன்று திருச்சி மாநகரில் கம்பரசம்பேட்டை, முத்தரசநல்லூர், கொண்டையம் பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் காவிரி கரையோரம் தடையை மீறி பொதுமக்கள் வழிபாடு செய்து வருகின்றனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvisionn