அமெரிக்க துணை அதிபர் பதவி ஏற்கும் கமலா ஹாரிஸ் - மன்னார்குடி அருகே கோலகல கொண்டாட்டம்!!

அமெரிக்க துணை அதிபர் பதவி ஏற்கும் கமலா ஹாரிஸ் - மன்னார்குடி அருகே கோலகல கொண்டாட்டம்!!

Advertisement

அமெரிக்க துணை அதிபர் பதவி ஏற்கும் கமலா ஹாரிஸ் பூர்வீக கிராமத்தில் புல்லன் குலதெய்வமான தர்மசாஸ்தா ஆலயத்தில் சிறப்பு பூஜைகள் செய்து பட்டாசுகள் வெடித்து இனிப்புகள் வழங்கி பொதுமக்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்

அமெரிக்க துணை அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே உள்ள துளசேந்திரபுரம் கிராமத்தை பூர்வீகமாக கொண்டவர். கமலா ஹரிஷ் அமெரிக்க துணை அதிபர் பதவி ஏற்கும் இவரது தாய் வழி தாத்தா கோபாலன் பாட்டி ராஜம் ஆகியோர் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்துள்ள துளசேந்திரபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர்.

Advertisement

அமெரிக்கா துணை அதிபர் தேர்தலில் முதன்முதலில் வெற்றிபெற்று பதவியேற்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒரு பெண்மணி என்பதும் குறிப்பிடத்தக்கது. பதவி ஏற்கும் நிலையில் துளசேந்திரபுரம் கிராமத்தில் வீடுகளில் முறுக்கு மற்றும் வடவத்தினால் கமலா ஹரிஷ் பெயர்களை வடிவமைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து தர்மசாஸ்தா ஆலயத்தில் சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகளும் பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கினார். பின்னர் கிராமத்தில் மக்கள் கமலா ஹரிஷ் எங்கள் கிராமத்திற்கு ஒரு முறையாவது வரவேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Advertisement

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய

https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0