தனியார் டிராவல் ஏஜென்சி மீது வழக்கு பதிவு!! மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு!!
வெளிநாடுகளிலிருந்து விமானம் மூலம் திருச்சிராப்பள்ளி விமான நிலையத்திற்கு வரும் தனியார் டிராவல் ஏஜென்சி தங்கும் விடுதிகளில் ஒரு அறையில் இரண்டு மற்றும் மூன்று பயணிகளை தங்க வைப்பதாகவும் ,கோவிட்-19 மருத்துவ பரிசோதனை செய்ய இரண்டு பரிசோதனை செய்ய முன் பணம் பெற்றுக் கொண்டு ஒரு பரிசோதனை மட்டுமே செய்வதாக புகார் வருகிறது.சம்மந்தப்பட்ட தனியார் டிராவல் ஏஜென்சி மீது காவல் துறையின் மூலம் வழக்கு பதிவு செய்ய மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு உத்தரவு.
மத்திய மாநில அரசு உத்தரவின்படி வெளிநாடுகளில் தங்கி இருக்கும் இந்தியவாழ் மக்களை சென்ற 1.06.2020 முதல் அரசு மற்றும் தனியார் டிராவல் ஏஜென்சிகள் மூலம் அழைத்து வர நிலையான உத்தரவு (sop) பிறப்பிக்கப்பட்டுள்ளது.அரசு உத்தரவின் பேரில் திருச்சிராப்பள்ளி பன்னாட்டு விமான நிலையத்திற்கு நாள்தோறும், இரண்டு மற்றும் மூன்று விமானங்கள் வெளிநாடுகளிலிருந்து சுமார் 400 முதல் 500 பயணிகள் வருகை புரிகிறார்கள். அவ்வாறு வருகை தரும் பயணிகளில் பலரும் முன்கூட்டியே தனியார் டிராவல் ஏஜெண்டுகள் விமான கட்டணம்,தனிமைபடுத்தும்
பொருட்டு தங்க மற்றும் உணவு செலவிற்கு மற்றும் இரண்டு முறை கோவிட்-19 மருத்துவ பரிசோதனை செய்ய உரிய தொகைகள் பெற்றுக்கொள்கிறார்கள்.
வெளிநாடுகளிலிருந்து திருச்சிராப்பள்ளிக்கு வருகை புரிந்தவுடன் விமான நிலையத்தில் அனைத்து பயணிகளுக்கும் கோவிட்-19 முதல் மருத்துவ பரிசோதனை எடுக்கப்பட்டு, தனிமைப்படுத்தும் விதமாக சம்மந்தப்பட்ட டிராவல் ஏஜெண்டுகள் மூலம் அவர்களால் முன்கூட்டியே கட்டணம் செலுத்திய ஹோட்டல்களுக்கு பயணிகள் அனுப்பி வைக்கப்படுகிறார்கள்.
விமான நிலையத்தில் கோவிட்-19 முதல் மருத்துவ அறிக்கை இரண்டு தினங்களில் பெறப்பட்டு நோய்த் தொற்று உள்ளவர்களை அரசு ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளும் பொருட்டு அனுப்பி வைக்கப்படுவார்கள். இதர பயணிகளுக்கு இரண்டாவது கோவிட்- 19 மருத்துவ பரிசோதனை , முதல் பரிசோதனை செய்யப்பட்ட நாளிலிருந்து 7 வந்து நாள் எடுக்கப்படும் இரண்டாவது மருத்துவ பரிசோதனை செய்ய பயணிகளிடம் ஏற்கனவே தலா ரூபாய் 3000 பெற்றுக்கொண்டு இரண்டாவது பரிசோதனை செய்யாமல் பயணிகளை திசை திருப்பியும்,ஆசை வார்த்தை கூறி , 6 வந்து நாளில் தங்கும் விடுதிகளிலிருந்து சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைப்பதாக கூறுவதாகவும், பயணிகள் ஒவ்வொரு நபர்களிடமும் தனி அறைக்கு என பணம் பெற்றுக் கொண்டு தங்கும் விடுதி/ ஹோட்டல்களில் ஒரு அறையில் இரண்டு மற்றும் மூன்று நபர்கள் சேர்ந்து தங்க வைப்பதாகவும், தனியார் டிராவல் ஏஜெண்டுகள் மீது புகார்கள் வரப்பெற்றுள்ளது. அவ்வாறு வரப்பெற்ற புகாரின் பேரில் சம்மந்தப்பட்ட டிராவல் ஏஜென்சி/ ஏஜெண்டுகள் மூலம், வழக்கு பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ள காவல் துறைக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு.அறிவுறுத்தியுள்ளார்