சுய உதவி குழுக்கள் வாங்கிய கடனை கட்ட அவகாசம் கொடுத்துள்ளதாக மத்திய அரசு பொய் சொல்வதாக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி பேட்டி!
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் மற்றும் ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பாக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி தலைமையில்
கொரோனா ஊரடங்கு காலத்தில் வருமானம் இன்றி தவிக்கும் சுய உதவிக் குழுக்கள் நுண் நிதி நிறுவனங்கள் மூலம் வாங்கிய கடன் தவணையை செலுத்த 2021 மார்ச் வரை அவகாசம் வேண்டும். அபாரத வட்டி மார்ச் வரை தள்ளுபடி செய்ய வேண்டும். கடன் வசூலிக்க முகவர்கள் அடாவடியாக திட்டுவது மன உளைச்சலை ஏற்படுத்துவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வலியுறுத்தி மத்திய மாநில அரசுகள் கோரிக்கையை நிறைவேற்ற கோரி காத்திருக்கும் போராட்டம் நடைபெற்றது.
காவல்துறை தடையை மீறி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்னதாக முற்றுகை போராட்டம் துவங்கினர். போராட்டத்தில் கலந்துகொண்ட பெண்கள் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
Advertisement
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி மத்திய நிதியமைச்சர் திருச்சி மாவட்டத்தை சேர்ந்தவர் அவர் மாவட்டத்திலேயே சுய உதவி குழுக்கள் வாங்கிய கடனை திருப்பிக் கட்ட சொல்லி தேசிய வங்கியில் உள்ளவர்கள் வீட்டிற்கு வந்து வசூலிப்பதற்க்கு அடாவடியாக நடப்பதாகவும் ஆபாச வார்த்தைகளில் பேசுவதாகவும் ஆனால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் இல்லை. கடனை திருப்பி செலுத்த அவகாசம் கேட்டும் அதற்காக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பாஜக அரசு நடவடிக்கை எடுப்பதாக பொய் சொல்கிறார்கள் என குறிப்பிட்டார்.இதற்கு மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உள்ளார்.