திருச்சி விமானநிலையத்தில் 32கிலோ தங்கம் பறிமுதல்

திருச்சி விமானநிலையத்தில் 32கிலோ தங்கம் பறிமுதல்

விமானம் மூலம் கடத்திவரப்பட்ட சுமார் 32 கிலோ தங்கத்தை திருச்சி விமான நிலைய அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். வெளிநாடுகளில் இருந்து விமானம் மூலம் தங்கம் கடத்திவருவதாக கிடைத்த தகவலை அடுத்து திருச்சி விமான நிலையத்தில் மத்திய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சார்ஜா, சிங்கப்பூர், மலேசியாவில் இருந்து வந்த 100க்கும் மேற்பட்ட பயணிகளின் உடைமைகளை சோதனையிட்டனர். அதில் சுமார் 50 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக விமானநிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து தங்கத்தை கடத்தி வந்த பயணிகளிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.