திருச்சி மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் வெங்காயம் மண்டியில் சில்லரை விற்பனை துவக்கம்:
தட்டுபாடுன்றி பொதுமக்களுக்கு வெங்காயம் எளிதில் கிடைக்கும் வகையில் திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு உத்தரவின் பேரில் வெங்காய மண்டியில் சில்லரை வெங்காய விற்பனையை கிழக்கு தாசில்தார் மோகன் தொடங்கி வைத்தார். இதில் பெரிய வெங்காயம் கிலோ 40 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.சின்ன வெங்காயம் 20 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.ஏற்கனவே எகிப்திலிருந்து வந்த 30 டன் பெரிய வெங்காயத்தில் 5 டன் திருச்சி வெங்காயம் மார்கெட்லேயே உள்ளது.
திருச்சி பழைய பால்பண்ணை அருகே உள்ள வெங்காய மண்டிக்கு பெரிய வெங்காயம் 120 டன் இன்று வந்தது. நாசிக்லிருந்து மட்டும் பெரிய வெங்காயம் மொத்த விற்பனையாக 40 ரூபாயிலிருந்து 100 ரூபாய் வரை விற்கப்பட்டது.எகிப்து பெரிய வெங்காயம் கிலோ 90 ரூபாய்க்கு மொத்த விற்பனையாக விற்கப்பட்டு வருகிறது.இந்த எகிப்து வெங்காயத்தை வாங்க வியாபாரி இல்லை என்பதால் 5 டன் எகிப்து வெங்காயம் மண்டியிலே தான் உள்ளது.
சின்ன வெங்காயம் பெரம்பலூர்,துறையூர் பகுதியிலிருந்து 60 டன் வந்ததுள்ளது .20 ரூபாயிலிருந்து 100 ரூபாய் வரை மொத்த விற்பனையாக சின்ன வெங்காயம் விற்கப்பட்டது.