சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நாளை (12.03.2023) பூச்செரிதல் விழா

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நாளை (12.03.2023) பூச்செரிதல் விழா

சக்திதலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது சமயபுரம் மாரியம்மன் கோவில். இக்கோயிலில் பூச்செரிதல் விழா ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக கொண்டாடப்படும். அதன்படி இந்த ஆண்டுக்கான பூச்செரிதல் திருவிழா நாளை தொடங்குகிறது.

இதையொட்டி அதிகாலை விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாசனம், அனுக்ஞை, வாஸ்து சாந்தி, அங்குரார்ப்பணம் முடிந்து காலை ஆறு முப்பது மணிக்கு மேல் 8 மணிக்குள் மீன லக்னத்தில் அம்மனுக்கு பாப்பு கட்டுதலுடன் பூச்செரிதல் விழா தொடங்குகிறது.

பங்குனி மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை வரை இந்த விழா சிறப்பாக கொண்டாடப்படும். இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் கல்யாணி தலைமையில் கோவில் பணியாளர்கள் மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

உலக ஜீவராசிகளை காப்பதற்காக தன்னைத்தானே வருத்திக்கொண்டு பர்னை பட்டினி விரதம் மேற்கொள்ளும் அம்பாளை குருளிர்விக்கும் வகையில் அனைத்து விதமான வண்ண மலர்களாலும், வாசனை மலர்களாலும்,

அம்மனுக்கு அபிஷேகம் செய்யும் பூச்செரிதல் விழாவும், 5 வார ஞாயிற்றுக் கிழமைகளில் நடத்தப்படுகிறது. 8வது நாள் கொடியேற்றத்துடன் தொடங்கி அதிலிருந்து 10வது நாள் சித்திரை முதல் செவ்வாய்கிழமை திருத்தேர் விழா நடைபெறும்.

இச்சமயத்தில் சமயபுரத்தாளை வழிபட்டால் ராகு - கேது தோஷம் நிவர்த்தியாகும். நவக்கிரசு ஆதிக்கத்தை உள்ளடக்கி நவக்கிரகங்களை நவசர்ப்பங்களாகக் கொண்டு அருள்பாலிக்கும் அம்பாளை இக்காலக்கட்டத்தில் விளங்குவதன் மூலம் நவக்கிரக தோஷங்கள் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn