பொன்மலைப்பட்டி மாவடிகுளத்தில் படகுகள் சவாரி தயார் - அனுமதி கேட்டு காத்திருக்கும் பொதுமக்கள்!!

பொன்மலைப்பட்டி மாவடிகுளத்தில் படகுகள் சவாரி தயார் - அனுமதி கேட்டு காத்திருக்கும் பொதுமக்கள்!!

Advertisement

திருச்சி பொன்மலைப்பட்டி உள்ள மாவடி குளத்தில் படகு சவாரி காண ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளதால் பொதுபணி துறையினர் அனுமதி எப்போது கிடைக்கும் என்று பொதுமக்கள் எதிர்பார்பில் உள்ளனர்.

Advertisement

பொன்மலையில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 147 ஏக்கர் பரப்பளவில் மாவடிகுளம் உள்ளது. இந்தக் குளம் மாநகராட்சி பகுதியில் அமைந்திருக்கும் மிகப்பெரிய குளம் ஆகும். அண்மையில் இந்த குளத்தில் பொதுப்பணித் துறை சார்பில் ரூபாய் 2 கோடி மதிப்பீட்டில் குளத்தை தூர்வாருதல், குளத்தை சுற்றி நடை பாதை அமைத்தல் உள்ளிட்ட வேலைகள் நடைபெற்று வந்தன. தற்போது பெய்து வரும் தொடர் மழையால் குளம் நிரம்பி கடல் போல் காட்சி அளிக்கிறது.

இந்தக் குளத்தில் வருடம் தோறும் வெளிநாட்டு பறவைகள் வருவது வழக்கம். இதனால் இந்த குளத்தை சுற்றுலா தளம் ஆக்கி படகு சவாரி விட வேண்டுமென்று இயற்கை ஆர்வலர்களும் பொதுமக்களும் நீண்டகால கோரிக்கையாக இருந்தது.
இந்நிலையில்  இயற்கை ஆர்வலர்கள் சங்கத்தின் சார்பாகவும், கீழக் குறிச்சி ஊராட்சி மன்ற தலைவர் சார்பிலும் கடந்த டிசம்பர் மாதம் 28ஆம் தேதி மாவட்ட ஆட்சியரிடம் குளத்தில் படகு சவாரி விடுவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று மனு அளித்திருந்தனர்.

Advertisement
 
இதுகுறித்து ஆட்சியரும் பொதுப்பணித் துறையிடம் சொல்லி நடவடிக்கை எடுப்பதாக  கூறியிருந்தார். இதனிடையே இந்த குளத்தில் அப்பகுதியை சேர்ந்த இயற்கை ஆர்வலர்களும் கீழக்குறிச்சி ஊராட்சி மன்ற தலைவர் சார்பாகவும் குளத்தில் உள்ள ஆகாயத் தாமரைகளை ஜேசிபி இயந்தியரம் மூலம் அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.  இதனை தொடர்ந்து படகுகளையும் செய்து தயார் நிலையில் வைத்துள்ளனர். விரைவில் மாவடி குளத்தில் படகு சவாரி தொடங்கும் என்ற எதிர்பார்ப்பில் பொதுபணி துறையினரின் அனுமதிக்காக அப்பகுதி மக்கள் காத்திருக்கின்றனர்.