வேலை செய்த வீட்டில் நண்பருடன் கை வைத்த கொத்தனார்

Sep 11, 2023 - 21:22
Sep 11, 2023 - 21:54
 1561
வேலை செய்த வீட்டில் நண்பருடன் கை வைத்த கொத்தனார்

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள பொன்மலைப்பட்டி காருண்யா நகரை சேர்ந்தவர் வீரராகவன் இவரது மனைவி சிவகாமி (50). இவர் வீட்டில் இருந்தப் பொழுது அந்த வீட்டில் ஏற்கனவே கொத்தனார் வேலை பார்த்த ஒரு வாலிபரும், மற்றொரு வாலிபரும் வீட்டின் கதவை தட்டி உள்ளனர்.

அப்பொழுது வீட்டின் கதவை திறந்த சிவகாமி என்ன என்று கேட்ட பொழுது அவர்கள் தங்களுக்கு குடிப்பதற்கு தண்ணீர் வேண்டும் என கூறியுள்ளனர். தனது வீட்டில் வேலை செய்த கொத்தனார் அவரது நண்பரும் தான் வந்துள்ளனர். என்பதால் கதவை சாத்தாமல் அவர்களுக்கு தண்ணீர் கொண்டு வருவதற்காக வீட்டிற்குள் சிவகாமி சென்றுள்ளார்.

அப்பொழுது இருவரும் சிவகாமி பின்னால் வந்து சிவகாமி கழுத்தில் அணிந்து இருந்த ஏழரைப்பவுன் தாலி செயினை அறுத்துக் கொண்டு தப்பி சென்றுள்ளனர். சிவகாமி சத்தமிட்டும் அவர்களை பிடிக்க முடியவில்லை. உடனடியாக இச்சம்பவம் குறித்து திருவெறும்பூர் போலீசருக்கு தகவல் கொடுத்துள்ளனர். 

அதன் அடிப்படையில் திருவெறும்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்த பொழுது சிவகாமி கழுத்தில் அணிந்திருந்த ஏழரைப்பவுன் தாலி செயின் பறிப்பது தெரிய வந்தது.

மேலும் அந்த தாலியில் இருந்த ஒரு காசு மட்டும் கீழே விழுந்துள்ளது. அதன் அடிப்படையில் திருவெறும்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து கொத்தனார் மற்றும் அவரது நண்பரையும் தேடி வருகின்றனர். பட்டப்பகலில் பெண்ணின் தாலி செயினை அடுத்து சென்ற இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision