எம். கே தியாகராஜ பாகவதர் சிலைக்கு அமைச்சர் கே. என் நேரு மாலை அணிவித்து மரியாதை

மாண்புமிகு நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் திரு. கே.என்.நேரு அவர்கள் இன்று மத்திய பேருந்து நிலையம் அருகிலுள்ள ஏழிசை மன்னர் எம்.கே. தியாகராஜ பாகவதர் மணி மண்டபத்தில் நிறுவப்பட்டுள்ள ஏழிசை மன்னர் எம். கே. தியாகராஜ பாகவதர் அவர்களின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மா. பிரதீப் குமார்.இ.ஆ.ப., அவர்கள், வணக்கத்திற்குரிய மாநகராட்சி மேயர் திரு.மு. அன்பழகன் அவர்கள், மாநகராட்சி ஆணையர் திரு. வே.சரவணன்.இ.ஆ.ப., அவர்கள், மாநகராட்சி அலுவலர்கள், மண்டல தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
திருச்சி விஷன் செய்திகளை telegram ஆப் மூலம் அறிய
https://www.threads.net/@trichy_vision