திருச்சியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி

திருச்சியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் K.N. நேரு வழங்கினார்

திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் இந்திய செயற்கை அவயங்கள் உற்பத்திக் கழகம் மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் இந்தியன் ஆயில் நிறுவனங்களின் சமூகப் பொறுப்பு திட்டத்தின் கீழ் திருச்சி மாவட்ட த்தைச் சார்ந்த 303 பயனாளிகளுக்கு 62 லட்சம் மதிப்பில் மோட்டார் பொருத்தப்பட்ட மூன்று சக்கர வாகனம், மடக்கு சக்கர நாற்காலி, மூன்று சக்கர சைக்கிள், ஊன்றுகோல், செல்போன்,  காதொழி கருவி , செயற்கை அவயங்கள் உள்ளிட்ட மாற்றுத்திறனாளி உபகரணங்ககளை அமைச்சர் K.N. நேரு மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கினார்

தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக 110 மாற்றுத்திறனாளிகளுக்கு 1 கோடியே 12 லட்சம் மதிப்பில் இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கப்பட்டது

இதில் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் தியாகராஜன், ஸ்டாலின் குமார் , மேயர் அன்பழகன் , மாநகராட்சி ஆணையர் சரவணன் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 திருச்சி விஷன் செய்திகளை whatsapp மூலம் அறிய 

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

திருச்சி விஷன் செய்திகளை telegram ஆப் மூலம் அறிய 

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision