ரூ.6.8 கோடியில் பச்சைமலை சாலையை புதுப்பிக்க திட்டம்

ரூ.6.8 கோடியில் பச்சைமலை  சாலையை புதுப்பிக்க திட்டம்

 திருச்சி பச்சைமலையில் சோபனாபுரம் மேல் செங்காட்டுப்பட்டி வழித்தடத்தை 6.8 கோடியில் மேம்படுத்த பொறியியல் பிரிவு மறுமதிப்பீடு செய்துள்ளது.

குறைந்தபட்சம் 30 கிராமங்களை இணைக்கும் 14 கிலோ மீட்டர் சாலை நீண்ட காலமாக சரி செய்யப்படாமல் இருந்தது மூன்று மாதங்களுக்குள் திட்டமானது செயல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது திட்டத்திற்கு நிதி அளிக்க நபார்டு உள்ளிட்ட பல்வேறு வழிகள் பரிசீலிக்கப்பட்டு உள்ளன.

 இந்த பகுதி பள்ளங்களால் நிறைந்து பொது போக்குவரத்துக்கு செல்ல முடியாத நிலையில் உள்ளது. 2021ல் முன்மொழிவு தயாரித்தாலும் சட்டசபை தேர்தல் பணி தாமதம் ஆகி நிதி ஒப்படைக்கப்பட்டது.வனத்துறை சமீபத்தில் இந்த முன்மொழிவை மறுமதிப்பீடு செய்து விரைவாக செயல்படுத்த உறுதியளித்தது.

மழைநீர் வடிகால் இல்லாததால் சாலை சேதம் அடைந்துள்ளது சமீபத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்து சாலையை அகலப்படுத்தும் பணியை விரைவில் நடைபெறும் என நம்புகிறோம் என சாலை பாதுகாப்பு ஆர்வலர் புத்தனாம்பட்டி என்று சரவணன் கூறினார் திருச்சி சேலம் ஆகிய இரு மாவட்டங்களிலும் உள்ள பழங்குடியின கிராமங்கள் கல்வி சுகாதாரம் விவசாய தேவைகளுக்கு சாலையை நம்பியுள்ளனர்,

 சாலை மறுசீரமைப்பு திட்டத்திற்கு கால அவகாசம் தேவைப்படுவதால் ஒட்டு வேலை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் மரவள்ளிக்கிழங்கு விவசாயிகள் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை முதல் அக்டோபர் வரை விளை பொருட்களை சந்தைப்படுத்த சாலையை பயன்படுத்தப்படுவதால் எம்சாண்ட் பயன்படுத்தி பராமரிப்பு பணிகளை பரிசீலிப்பதாக வனத்துறை உறுதி அளித்துள்ளது.

இந்த முன்மொழிவு விரிவானது புதிய மழைநீர் வடிகால் வலையமைப்பு மற்றும் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்வதற்காக தடுப்பு சுவர்கள் அதற்கான திட்டங்களை கொண்டுள்ளது என அதிகாரி ஒருவர் கூறினார் இந்த சாலையை மாநில நெடுஞ்சாலை துறையிடம் ஒப்படைக்க உள்ளூர்வாசிகள் வலியுறுத்தினர் ஆனால் வனத்துறை வட்டாரங்கள் கூறுகையில் இந்த செயல்முறை கடினமானது மற்றும் நேரத்தை எடுத்துக்கொள்ளும் என்றனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...

https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5

#டெலிகிராம் மூலமும் அறிய..

https://t.co/nepIqeLanO