திருச்சி மாவட்டத்தில் தடை - பறக்கும் படை கண்காணிப்பு - ஆட்சித்தலைவர் தகவல்

திருச்சி மாவட்டத்தில் தடை - பறக்கும் படை கண்காணிப்பு - ஆட்சித்தலைவர் தகவல்

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள விசைத்தறி உரிமையாளர்கள் மற்றும் விசைத்தறி நெசவாளர்கள் கீழ்க்கண்ட 11 கைத்தறி ரகங்களை விசைத்தறியில் உற்பத்தி செய்ய தடை செய்யப்பட்டுள்ளது.

1. பேட்டு பார்டருடன் கூடிய சேலை

2. பேட்டு பார்டருடன் கூடிய வேட்டி

3. துண்டு மற்றும் அங்கவஸ்தரம்

4. லுங்கி

5. போர்வை, படுக்கை விரிப்பு, அலங்கார துணி

6. ஜமக்காளம்

7. உடை துணி

8. கம்பளி

9. சால்வை

10. உல்லன் ட்வீட் மற்றும்

11. சத்தார்க் ஆகிய 11 இரகங்கள் விசைத்தறியில் உற்பத்தி செய்ய கூடாது என்று கைத்தறி இரக ஒதுக்கீடு சட்டம் வரையறுக்கப்பட்டுள்ளது. திருச்சிராப்பள்ளி மாவட்டத்திற்கு கைத்தறி ரக ஒதுக்கீடு சட்டத்துக்குப் புறம்பாக ஜவுளி ரகங்கள் மலிவு விலையில் காட்சிப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்படுவதால் கைத்தறி நெசவாளர்கள் வேலைவாய்ப்பு பாதிக்கப்படுவதாகக் கூறி ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனை தவிர்க்கும் நோக்கத்தில் தற்போது கைத்தறி ரக ஒதுக்கீடு சட்டம் 1985-ஐ அமல்படுத்தி கைத்தறி துறையால் தற்போது பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த பறக்கும் படையினர் மாவட்டத்தில் உள்ள விசைத்தறி கூடங்கள், தனியார் ஜவுளி விற்பனை நிலையங்கள் ஆகியவற்றில் திடீர் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். இந்த ஆய்வின் போது சட்டத்துக்குப் புறம்பாக ஜவுளி ரகங்கள் உற்பத்தியில் ஈடுபடுதல் அல்லது விற்பனை செய்தல் போன்ற நடவடிக்கைகளை கண்டறியும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட விசைத்தறியாளர் மீது காவல்துறையில் புகார் அளித்து வழக்குப் பதிவு செய்யப்படும்.

தனியாரிடம் கூலிக்கு நெசவு செய்து வரும் கைத்தறி நெசவாளர்கள் வசித்து வரும் பகுதிக்கு அருகில் உள்ள ஏதேனும் ஒரு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராக சேர்ந்து தொடர்ச்சியாக வேலை வாய்ப்பும், அதற்கான ஊதியமும் பெற்றுப் பயனடையலாம். திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள விசைத்தறி உரிமையாளர்கள் மற்றும் விசைத்தறி நெசவாளர்கள் கீழ்க்கண்ட 11 கைத்தறி ரகங்களை விசைத்தறியில் உற்பத்தி செய்ய தடை செய்யப்பட்டுள்ளது. இதில் பேட்டு பார்டருடன் கூடிய சேலை, பேட்டு பார்ட்ருடன் கூடிய வேட்டி, துண்டு மற்றும் அங்கவஸ்திரம், லுங்கி, போர்வை, படுக்கை விரிப்பு, அலங்கார துணி, கம்பளி, சால்வை, உல்லன் ட்வீட் மற்றும் சத்தார்க் ஆகிய ரகங்களை விசைத்தறியில் உற்பத்தி செய்ய கூடாது.

தடை செய்யப்பட்ட கைத்தறி ரகங்கள் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு திருச்செங்கோடு உதவி அமலாக்க அலுவலரை (கைப்பேசி எண் - 94434-75307) தொடர்பு கொள்ளமாறு திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision