திருச்சி ஸ்ரீரங்கத்தில் ரவுடியை சுட்டுப்பிடித்த போலீசார்

திருச்சி ஸ்ரீரங்கத்தில் ரவுடியை சுட்டுப்பிடித்த போலீசார்

திருச்சி ஸ்ரீரங்கம் ரயில்வே பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் என்கின்ற ஆட்டுக்குட்டி சுரேஷ் (33) நேற்று அம்பேத்கார் நகர் வழியாக வந்த பொழுது மூன்று இரு சக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து வந்த ஐந்து பேர் கொண்ட கும்பல் திடீரென சுரேஷின் இருசக்கர வாகனத்தை வழிமறித்து பட்டாக்கத்தி, அருவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் சுரேசை சாரமாரியாக வெட்டி கொலை செய்தனர்.

இதனை தொடர்ந்து, இந்த கொலை வழக்கு குறித்து ஸ்ரீரங்கம் போலீசார் வழக்கு பதிந்து ஜம்புகேஸ்வரன் உள்ளிட்ட ஐந்து பேரை தேடி வந்தனர். அவர்களில் மேலூர் வண்ணத்துப்பூச்சி பூங்கா அருகே பதுங்கி இருந்த ஜம்புகேஸ்வரனை ஸ்ரீரங்கம் காவல்நிலைய ஆய்வாளர் வெற்றிவேல் தலைமையிலான போலீசார் விரட்டி பிடிக்க முயன்ற போது உதவி ஆய்வாளர் ராஜகோபாலை, ரவுடி ஜம்புகேஸ்வரன் அரிவாளால் வெட்டினார். இதில் காயமடைந்த அவர் தன்னை தற்காத்து கொள்வதற்காக ஜம்புகேஸ்வரனை நோக்கி துப்பாக்கியால் சுட்டார்.

இதில் ஜம்புகேஸ்வரன் இடது காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்தது. இதில் கீழே விழுந்த அவரை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் காயம் அடைந்த நான்கு காவலர்களும் திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெற்று வரும் காவலர்களை திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி நேரில் பார்வையிட்டு நலம் விசாரித்தார்.

திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி செய்தியாளர்களிடம் கூறுகையில்... விசாரணைக்காக ஜம்பு என்கிற ஜம்புகேஸ்வரனை அழைத்து செல்லும் போது காவல்துறையிரை தாக்கி விட்டு அவர் தப்ப முயன்றார். அதனால் தற்காப்பிற்காக காவல்துறையினர் அவரை இடது காலில் சுட்டு பிடித்தனர். தற்போது கைது செய்யப்பட்ட ஜம்பு மீது 15 வழக்குகள் உள்ளன. இது தொடர்பாக ஸ்ரீரங்கம் ஆர்.டி.ஒ விசாரணை நடைபெறும் என தெரிவித்தார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision