சாலை விபத்தில் திருச்சி காவலர் பலி - திருமணமான 20 நாளிலே பரிதாபம்

சாலை விபத்தில் திருச்சி காவலர் பலி - திருமணமான 20 நாளிலே பரிதாபம்

Advertisement

திருச்சி மாவட்டம், லால்குடி பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித்குமார் (29). இவர் மணிகண்டம் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வந்தார்.

Advertisement

இந்நிலையில் பணி முடிந்து இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது லால்குடி சாலை தாளக்குடி அருகே அகிலாண்டபுரம் என்ற பகுதியில் அவர் தனது பைக்கில் வரும்போது, குறுக்கே வந்த ஆட்டோ மீது மோதி தூக்கி வீசப்பட்ட அவர், இரும்பு கம்பியில் மோதி உள்ளார். 

இதில் அவர் அணிந்திருந்த ஹெல்மெட் இரண்டாக பிளந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.இவர் உடனடியாக மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து சமயபுரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 Advertisement

உயிரிழந்த காவலர் ரஞ்சித்குமாருக்கு கடந்த 20 நாட்களுக்கு முன்புதான் திருமணம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய

https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM