பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 300க்கும் மேற்பட்ட மின்வாரிய ஊழியர்கள் தர்ணா போராட்டம்!
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 300க்கும் மேற்பட்ட மின்வாரிய ஊழியர்கள் பணி புறக்கணித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அனைத்து சங்கங்கள் ஒன்றிணைந்து மின் சப்ளை துண்டிப்பது தீவிரமான போராட்டங்களில் ஈடுபடப் போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Advertisement
மின்வாரிய தலைவரின் தொழிலாளர் விரோதப் போக்கை கண்டித்தும், துணை மின் நிலையங்களை தனியார்மயமாக்கும் கொள்கை முடிவையும் ஓய்வு பெற்றவர்களை பணியில் அமர்த்தும் முடிவை கண்டித்தும், மின் வாரியத்தில் 42 ஆயிரம் காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் எனவும், மின்வாரிய வட்டங்களில் பல்வேறு பதவிகளை அழிக்கும் தலைவரின் போக்கை கண்டித்தும், ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்கிட வேண்டும் யார் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்றைய தினம் தமிழகம் முழுவதும் மின்வாரிய பொறியாளர் அலுவலகத்தில் தர்ணா போராட்டங்கள் காலை முதல் மாலை வரை நடைபெறுகிறது.
Advertisement
அதன்படி மின் வாரிய நிர்வாகம் மற்றும் தமிழக அரசை கண்டித்து திருச்சி மன்னார்புரத்தில் உள்ள மின்வாரிய பொறியாளர் அலுவலகம் முன்பு மின்வாரிய அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு சார்பில் நடைபெற்று வரும் தர்ணா போராட்டத்தில் 300க்கும் மேற்பட்ட மின்வாரிய ஊழியர்கள், அதிகாரிகள் பங்கேற்றனர்.