தரைக்கடை வியாபாரிகள் ஒப்பாரி போராட்டம் - ஆர்டிஓ பேச்சுவார்த்தை.

தரைக்கடை வியாபாரிகள் ஒப்பாரி போராட்டம் - ஆர்டிஓ பேச்சுவார்த்தை.

திருச்சி மாநகர் டிவிஎஸ் டோல்கேட் சுப்ரமணியபுரம் பகுதிகளில் பல ஆண்டு காலம் சாலையோரத்தில் பூ, பழம், காய்கறி உள்ளிட பொருட்களை தள்ளுவண்டிகளில் வைத்து வியாபாரம் செய்து வந்தவர்களை நேற்று மாநகராட்சி, நெடுஞ்சாலைத்துறை, காவல் துறை கூட்டாக சேர்ந்து எந்த வித முன்னறிவிப்போ, தகவலே இல்லாமல் திடீரென ஆக்கிரமிப்பை அகற்றுதல் என்ற பெயரில் JCP எந்திரங்களை கொண்டு தள்ளுவண்டிகளை அடித்து நொறுக்கி பழங்கள், காய்கறிகள் , உணவு பொருட்கள் உள்ளிட்ட பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை கடுமையாக சேதபடுத்தியுள்ளதை கண்டித்தும்,

சாலையோர வியாபாரிகளை கணக்கெடுப்பு நடத்தி அடையாள அட்டை வழங்கி 14 பேர் கொண்ட விற்பனைக்குழு அமைக்க வேண்டும். திருச்சி தெப்பக்குளம், மத்திய , சத்திரம் பேரூந்து நிலையம் , உள்ளிட்ட பல பகுதிகளில் அடையாள அட்டை வழங்கி தேர்தல் நடத்தி விற்பனைக்குழு அமைக்காமல் சாலையோர வியாபாரிகள் கடைகளை அப்புறபடுத்தக்கூடாது. சுப்ரமணியபுரத்தில் நேற்று நடந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது உயர்நீதிமன்ற உத்திரவை மீறுதல் ,பொது சொத்தை சேதபடுத்துதல், வியாபாரிகளை தாக்கி காயபடுத்துதல் போன்ற பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும் தமிழக அரசுஉரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட திருச்சி மாநகராட்சி முன்பு பாதிக்கப்பட்ட வியாபாரிகளோடு சேர்ந்து ஒப்பாரி வைக்கும் போராட்டம் நடைபெற்றது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொன்மலை பகுதி செயலாளர் விஜயேந்திரன் தலைமையில், சிபிஎம் மாநகர் மாவட்ட செயலாளர் ராஜா , மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வெற்றிச்செல்வன், கார்த்திகேயன், லெனின், மணிமாறன், தரக்கடை சங்க மாவட்ட செயலாளர் செல்வி, மாவட்ட தலைவர் கணேசன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு ஆர்டிஓ அருள் மற்றும் கண்ட்டோன்மென்ட் காவல்துறை சரக துணை ஆணையர் பாஸ்கர் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision