ஓடும் ரயிலிருந்து வாலிபரை கீழே தள்ளி கொலை - நால்வருக்கு ஆயுள் தண்டணை

ஓடும் ரயிலிருந்து வாலிபரை கீழே தள்ளி கொலை - நால்வருக்கு ஆயுள் தண்டணை

கடந்த (23.12.2019)ம் தேதி வண்டி எண் 826623 சுவிதா எக்ஸ்பிரஸ் இரயில் வண்டியில் தாம்பரத்திலிருந்து நாகர்கோவில் வரை செல்லும் இரயில் வண்டியில் ஓடிசாவிலிருந்து மதுரைக்கு சென்டரிங் வேலைக்கு வந்த ஒடிசா மாநிலத்தில் உள்ள சுந்தர்கஹ் மாவட்டத்தை சேந்த்த ரூர்கேலா தாலுக்கா அம்பேத்கர் பகுதியை சேர்ந்த ராஜீவ் கிரி மகன் ஜித்தன் கிரி (26),

ஷீபா பிரசாத் ஓஜா மகன் அணில் குமார் ஓஜா (23), திவ்வாக் கடாயா மகன் சுக்தேவ் கடாயா (50), தீமா படயாக் மகன் சோட்டு படயாக் (28) மற்றும் தெபுதாஸ் மகன் ஆகாஸ் தாஸ் (22) அவர்களுக்குள் ஏற்பட்ட வாய்தகராறில் அவர்களுடன் வந்த ஆகாஸ்தாஸ் என்பவரை இரயில் வண்டியில் இருந்து கீழே தள்ளி கொன்று விட்டனர். இது சம்பந்தமாக தகவல் தெரிந்து அப்போது இருந்த காவல் உதவி ஆய்வாளர் பால்வண்ணநாதன் (தற்போது சென்னையில் Cyber Crime உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார்).

காவல் ஆய்வாளர் அம்பேத்கார் (தற்போது சென்னையில் SBCID ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார்) ஆகியோரும் துரிதமாக நடவடிக்கை எடுத்து வழக்கு பதிவு செய்தும் எதிரிகளை கைது செய்தும் எதரிகளை நிதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். காவல் ஆய்வாளர் அம்பேத்கார் பணியிட மாற்றத்திற்க்கு சென்ற பின்னர் வழக்கின் புலன் விசாரணை ஆய்வாளராக ஜாக்கிலின் (தற்போது திருச்சி இருப்புப்பாதையில் ACTU ஆய்வாளராக பணிபுரித்து வருகிறார்) ஆய்வாளர் இளவரசி (தற்போது ஜோலார்பேட்டை இருப்புப்பாதை காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார்).

இவர்கள் இருவரும் புலன் விசாரணை செய்து வழக்கின் இறுதி குற்ற அறிக்கை தாக்கல் செய்தனர். மேற்படி வழக்கானது நீதிமன்ற வீசாரணைக்கு எடுத்துக்கொள்ப்பட்டு நீதிமன்ற விசாரணையின் முடிவில் இன்று (30.06.2023) -ம் தேதி வழக்கின் எதிரிகள் நால்வருக்கும் தலா ஒவ்வொருவருக்கும் ஆயுள் தண்டணை (14 ஆண்டுகள்) விதித்தும் 5000 ரூபாய் அபராதம் விதித்தும் கட்ட தவறினால் 3 மாதம் கடுங்காவல் தண்டணை விதித்தும் விருத்தாசலம் அமர்வு நீதிமன்ற நீதிபதி பிரபாசந்திரன் தீர்ப்பு வழங்கினார்.

மேற்படி வழக்கை திறம்பட வழி நடத்திய அரசு தரப்பு வழக்கறிஞர் சுப்ரமணியன் இதற்கு உறுதுணையாக இருந்து வழக்கை திறம்பட கையாண்டுள்ளார். எதிரிகள் நால்வரும் நீதிமன்ற உத்தரவின்படி கடலூர் மத்திய சிறையில் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர். இந்த வழக்கானது திருச்சி உட்கோட்ட இருப்புப்பாதை காவல் நிலையத்திற்க்கு உட்பட்ட விருத்தாசலம் இருப்புப்பாதை காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட கொலை வழக்கில் இருப்புப்பாதை காவல் துறை துவங்கப்பட்டதில் இருந்து இதுவரை பெறாத அளவிற்கு முதல் முறையாக ஆயுள் தண்டணை பெறப்பட்டது என்பது குறிப்பிடதக்கது.

மேற்படி தண்டணை விவரம் குறித்து திருச்சி இருப்புப்பாதை உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் பிரபாகரன், திருச்சி இருப்புப்பாதை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் செந்தில்குமார் மற்றும் இருப்புப்பாதை காவல்துறை கூடுதல் இயக்குனர் வனிதா ஆகியோர் எதிரிகளுக்கு தண்டணை பெற்று கொடுத்த நற்செயலை பாராட்டி ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவல் ஆளினர்களை வெகுவாக பாராட்டினார்கள்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn